திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல்: பிப். 21 முதல் நடைபெறும் என அறிவிப்பு!

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 21- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது!!

Last Updated : Feb 3, 2020, 05:14 PM IST
திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல்: பிப். 21 முதல் நடைபெறும் என அறிவிப்பு! title=

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 21- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது!!

முதற்கட்டமாக திமுக கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஒன்றிய, நகர, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். அதன் பிறகு மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் தேர்தல் முடிந்ததும், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரையில், 14 உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற 21ஆம் தேதி முதல் உட்கட்சித் தேர்தல் தொடங்கும் என்றும், முதற்கட்டமாக, கிளை கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் திமுக தெரிவித்துள்ளது. பின்னர் படிப்படியாக, வட்டம், ஒன்றியம், நகரம், மாநகர கழகத் தேர்தல்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர்,பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்றும் திமுக அறிவித்துள்ளது. 

 

Trending News