சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு தேர்வின் ஆங்கில வினாத்தாளில் பெண்களுக்கு எதிரான சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. மாணவர்கள் படித்து விடையளிக்கும் பகுதியில், "இல்வாழ்க்கையில் மனைவிகள் வலுப்பெறுவது, பெற்றோர் என்ற கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது. பெண்கள் கணவனுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். முன்பு அப்படியான சூழல் இருந்த நிலையில், இப்போது இல்லை. இதனால் இளம் தலைமுறையினர் தந்தையின் பேச்சை மதிப்பதில்லை. குழந்தைகளையும், வேலையாட்களையும் அவர்களுக்கான இடத்தில் வைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
ALSO READ | கடும் எதிர்ப்பை அடுத்து, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் நீக்கம்!.
நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை சந்தித்த இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்தி மக்களவையில் எடுத்துரைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், அந்த வினாத்தாள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற அவர், இதற்காக சிபிஎஸ்இ மன்னிப்புகோர வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல், சிபிஎஸ்சி சர்ச்சைக்குரிய வினாவுக்கு ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்தார். டிவிட்டரில் வெளியிட்ட அவரது கண்டன பதிவில், சிபிஎஸ்இ ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்றிருக்கும் படித்து விடையளிக்கும் பகுதியில் உள்ள கருத்துகள் அருவருப்பானது என தெரிவித்தார். இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் நசுக்க பாஜக - ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி செய்வதாக சாடிய அவர், கடின உழைப்பு மட்டுமே வெற்றி தரும். மதவெறி தராது என கூறினார்.
ALSO READ | CBSE: குழந்தைகளை சீரழிக்க பா.ஜ.க - RSS சூழ்ச்சி! ராகுல்காந்தி கண்டனம்
தொடர் கண்டனங்கள் எழுந்ததால், சர்ச்சைக்குரிய வினாவை நீக்குவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. அதேநேரத்தில் அந்த வினாவுக்கு உரிய மதிப்பெண் அனைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து, விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ, சர்ச்சைக்குரிய வினாவுக்கு முழுமையான மதிப்பெண் கொடுப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் தவறானது என்றும், அதனை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR