சென்னை: முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தகவல் வந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
Puratchi Thalaivi Amma suffered a cardiac arrest this evening, Amma is being treated & her health is being monitored by experts.
— AIADMK (@AIADMKOfficial) December 4, 2016
Apollo Hospitals press release on Puratchi Thalaivi Amma's health. pic.twitter.com/2FpRJSDQat
— AIADMK (@AIADMKOfficial) December 4, 2016
இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஆஞ்ஜியோ கிராபை போன்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். உடலில் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை சீராக்குவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 24 மணி நேரத்திற்கு பின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் வெளியே வரும்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பற்றிய தகவல் பரவியதில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை முன் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், அப்பலோ மருத்துவமனை அமைந்துள்ள சாலை முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அவர்கள் பூரணமாக நலம் பெறுவார், அவர் குணம் அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யோம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
மேலும் உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் ஜெயலலிதா உடல்நலம் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
Got to hear about CM, TN Ms #Jayalalithaa's illness. May she regain her good state of health soon, wishing her a speedy recovery: #UPCM
— CM Office, GoUP (@CMOfficeUP) December 5, 2016
முதல்வர் ஜெயலலிதாவை கான மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் பாஜக ராஜ்ய சபா எம்.பி. லா கணேசன் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்று ஜெயலலிதா உடல் நிலை பற்றி விசாரித்தார்கள்.