வாணியம்பாடி கபடி போட்டி: வாணியம்பாடி அருகே நடைப்பெற்ற ஆல் இந்தியா A - கிரேட் கபடி போட்டியில் ஆண்கள் இறுதி போட்டியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் டெல்லி போலீஸ் அணியும் பரிசு தொகை மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் ஆல் இந்தியா A - கிரேட் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி கடந்த வியாழக்கிழமை துவங்கி நான்கு நாட்களாக வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
இந்த கபடி போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, குஜராத் மகாராஸ்டிரா, போன்ற பல மாநிலங்களிலிருந்து ஆண்கள் அணியில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 20 அணிகளும் பங்கேற்றன, போட்டியில் பங்கேற்ற அணிகளில் மாநில மற்றும் தேசிய அளவிலான, மற்றும் புரோ கபடி, யுவா கபடி ஆகிய அணிகளை சேர்ந்த கபடி வீரர்களும் கபடி போட்டியில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | பழைய துரைமுருகனா பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்..!
நான்கு நாட்கள் நடைப்பெற்ற கபடி போட்டியில் இறுதி போட்டி இன்று நடைப்பெற்றது, இதில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா மாநில அணியும், - பேங்க் ஆப் பரோடா கர்நாடகா ஆகிய இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியில் பேங்க் ஆப் பரோடோ அணியை கர்நாடகா அணியை வீழ்த்தி முதல்பரிசான 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது, அதேபோல் இரண்டாம் இடத்தை பிடித்த கர்நாடாக மாநில அணி 1 லட்சம் ரூபாயும் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
அதே போல் பெண்கள் பிரிவில் நடைப்பெற்ற இறுதி போட்டியில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த எஸ்.எம்.கே.வி.சி ( சண்முகா மொமோரியல் வெண்ணிலா கபடி குழு ) அணியும், டெல்லியை சேர்ந்த ஐ.டி.பி.பி ( டெல்லி - திபெத் பார்டர் போலீஸ்) அணியும் மோதியது, இந்த போட்டியில் டெல்லி போலீஸ் அணி, எஸ்.எம்.வி.கே.சி அணியை வீழ்த்தி முதல் பரிசான 1 லட்சம் ரூபாய் மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது.
இதில் இரண்டாவது இடம் பிடித்த எஸ்.எம்.வி.கே.சி அணியிற்கு 60 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது, மேலும் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு தொகையை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் சாரதி குமார் ஆகியோர் வழங்கினர்.அதுமட்டுமின்றி நான்கு நாட்கள் நடைப்பெற்ற இந்த கபடி போட்டியை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் ஓட்டு விழாது - கனிமொழி எம்பி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ