Kalaignar Magalir Urimai Thogai: சேலம் மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிப்பது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், மாவட்டத்தில் உள்ள 1541 ரேஷன்கடைகள் வாயிலாக மகளிருக்கு விண்ணப்பங்களை விநியோகிக்கபட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் 500 ரேஷன்கார்டுகள் உள்ள கடைகளில் ஒருபதிவு மையமும், 500 முதல் 600 ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளில் இரண்டு பதிவு மையங்களும், ஆயிரம் முதல் 1500 ரேஷன்கார்டு உள்ள இடங்களில் மூன்று பதிவு மையங்களும், 6500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளில் நான்குபதிவு மையங்களும் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாமக நிர்வாகி படுகொலை! தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மேலும் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் 2977 பேர் தன்னார்வலர்களாக பணியாற்ற உள்ளதாகவும் கூறினார். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதிவு செய்யும் பணி முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் கூறினார். சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளதாகவும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட முகாம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கி, ரேஷன் கடைகளில் அமைக்கப்படும் பதிவு மையங்கள் வாயிலாக பதிவு செய்யப்படும் என்றும் அனைத்து பணிகளும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதால் கட்டணம் ஏதும் செலுத்தப்பட தேவையில்லை என்றார்.
மேலும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், நாளொன்றுக்கு 30 பேர் முதல் 50 பேர் வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அலைமோத வேண்டாம், தங்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் ரேஷன் கடைகளுக்கு வருமாறு கோரிக்கை விடுத்தார். விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு முழுமையான கள ஆய்வு மற்றும் பரிசீலனைக்கு பின்னரே உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறினார். தங்களுக்கு தகுதி உள்ளது ஆனால் நிராகரிக்கப்பட்டதாக நினைத்தால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், உரிமைத்தொகை பெறுவதற்காக இடைத்தரகர்களை யாரும் நம்பவேண்டாம், இடைத்தரகர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மேலும் கிராமப்புறங்களில் வங்கிகணக்கு இல்லாத மகளிருக்கு, வங்கிகணக்கு தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். தேர்தல் பணிகள் போன்று பதிவு பணிகளும் நடைபெறும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ