கன்னட பின்னணி பாடகர் எல்.என்.சாஸ்திரி காலமானார்!

Last Updated : Aug 30, 2017, 05:50 PM IST
கன்னட பின்னணி பாடகர் எல்.என்.சாஸ்திரி காலமானார்! title=

கன்னட சினிமாவின் பிரபல இசை கலைஞர் எல். என். சாஸ்திரி புற்றுநோய் காரணமாக உயிர் இழந்தார்.

இந்திய பின்னணி பாடகராகவும், கன்னட சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராகவும் இருந்தார் எல். என். சாஸ்திரி. அஜகஜந்தரா படத்தில் பின்னணி பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், சாஸ்திரி 3000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த சில தினங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று பெங்களூரில் உயிர் இழந்துள்ளார். 'ஜனாமாதா ஜோடி' படத்தில் இவர் பாடிய பாடலுக்கு கர்நாடகா அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருது பெற்றார்என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News