தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து சுமார் 44 ஆயிரம் டன் தாமிரம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதற்கு முன்பு, நம் நாட்டில் இருந்து 3 லட்சத்து 34 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த வழக்கில் ஆலையை மீண்டும் இயக்க தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது.
ALSO READ | தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் விநியோகம்...!
நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வேதா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதை தொடர்ந்து, வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .மேலும் வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.