மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளீட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.
முன்னதாக தடையை மீறி சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேரையும் காவல்துறை கைது செய்தது. பின்னர் கடந்த மே மாதம் இவர்களின் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யப்பட்டது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து புழல் சிறையில் இருந்து விடுதலையான திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாலை அணிவித்து மே 17 இயக்கத்தினர் வரவேற்றனர்.