நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது -உச்சநீதிமன்றம்!
தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள் Sterlite ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி Sterlite ஆலையின் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் Sterlite குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதையடுத்து, இந்த ஆலோசனைக்கு பிறகு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாது.
இந்த மனு மீதான விசாரணையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கை குறித்து பசுமை தீர்ப்பாயமே விசாரித்து உத்தரவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.