Book release : ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும், நடிகருமான திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்கள் வெளியிட, அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எம். முரளி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் இன்று மாலை நடைபெற்ற இந்த விழாவில் கலைமாமணி திரு. மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்த சிறப்புரையை வழங்கினர். புத்தகம் குறித்த தெளிவான கருத்துக்களை, சுவைப்பட எடுத்துக் கூறிய அவர்களின் சிறப்புரையை இவ்விழாவில் கலந்து கொண்ட திரளான ஈஷா தன்னார்வலர்களும், பொது மக்களும் ரசித்துக் கேட்டனர்.
சத்குரு அவர்கள் இந்த புத்தகத்தின் மூலம், கர்மா என்றால் என்ன? நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரிக்கிறார். மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிகாட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார்.
'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.
மேலும் படிக்க | 7 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் நடிகை தமன்னா! பெற்றோர்கள் கடும் கண்டனம்..
மேலும் புத்தக வாசிப்பாளர்களால் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்கிலப் புத்தகம் NEWYORK BEST SELLER லிஸ்ட்டில் இடம்பிடித்தது. அத்தோடு 25-க்கும் அதிகமான உலக மொழிகளில், இந்த புத்தகத்திற்கான மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | நடந்து முடிந்த த.வெ.க கல்வி விருதுகள் விழா! ஹைலைட்ஸ் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ