நடிகர் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'நாங்கள் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை, படப்பிடிப்பை நெய்வேலி சுரங்கத்தில் நடத்துவதற்கே எதிர்ப்பு தெரிவித்தோம். என்றார்.
திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மத ரீதியான தாக்குதல்களை ஊக்குவிக்கின்றனர். பாதிரியார்களை நிர்பந்தப்படுத்தி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்குகின்றனர்' என்று தெரிவித்தார்.
சுயவிளம்பரத்துக்காக பேசிவரும் தமிழருவி மணியன் குறித்து பேச விருப்பமில்லை. மேலும் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு பாஜக அரசு காரணமல்ல' என்றார்.