நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்திருக்கும் நிலையில், அவருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரின் செயல்பாடு குறித்த கேள்விக்கு கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்தார். கோவையில் தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் இன்றைக்கு 69 உயிர்களை இழந்திருக்கிறோம்.நேற்று மிக முக்கியமாக ஒரு பொறுப்பில் இருக்கும் மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள் என்று மிக மிக ஒரு மோசமான பதிவை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார், அவருடைய பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
முதலமைச்சர் முன்பு மூத்த அமைச்சர்(துரைமுருகன்) சட்டமன்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் கிக்கு என்கிறார், சரக்கு பற்றி பேசுகிறார் கிறுக்குத்தனமாக பேசுகிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராயம் என்பது வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முழுக்க டாஸ்மார்க் கடைகளை நடத்தி ஆண்டு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து, மக்கள் உயிரை பணயம் வைத்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமைதான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. பிறகு எதற்கு டாஸ்மாக் வைத்துள்ளீர்கள்?, அதில் தரம் இல்லை என்பதை மூத்த அமைச்சர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால், யார் கள்ளச்சாராயம் நோக்கி செல்ல வைக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிகிறது. குடியை கொடுத்து கோடியை நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளீர்கள்
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாய் அடைத்து விடுகிறார்கள். ஆனால் மூத்த அமைச்சர் நேற்று சட்டசபையில் சொல்லி உள்ளார்,அவர்களாக திருந்தினாலே தவிர திருத்த முடியாது என்று சொல்கிறார். பிறகு எதற்கு இந்த ஆட்சி?, எல்லா இடங்களிலும் காவல் நிலையம் வைக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு எப்படி டாஸ்மார்க் மட்டும் வைக்க முடியும்?, போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா?. இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமான துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்.
திமுக அமைச்சர் துரைமுருகன் கொஞ்சம் கூட ஒரு மூத்த அமைச்சர் என்ற பொறுப்பில்லாமல் சரக்கில் கிக் இல்லை என்று கேவலமான ஒரு ஸ்டேட்மென்ட்டை சட்டசபையில் கொடுக்கிறார். எந்த அளவிற்கு இது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு. கள் இறக்க அனுமதி கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். ஒரு பக்கம் மணல் கொள்ளை, ஒரு பக்கம் கனிம வள கொள்ளை, ஒரு பக்கம் டாஸ்மார்க், ஒரு பக்கம் கள்ளச்சாராயம், ஒரு பக்கம் கஞ்சா போதை விற்பனை, எங்கும் வேலை கிடையாது, இப்படி சென்று கொண்டிருந்தால் தமிழ்நாடு என்னவாகும் என தெரியவில்லை. விஜய் அரசியல் என்டிரிக்கு வாழ்த்துகள், அவரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் - இளங்கோவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ