நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்களுக்கு முன்னர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
விஜயகாந்தின் உடல்நிலை..
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது. இதனால், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவல்கள் பல இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. சில யூடியூப் சேனல்கள், விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தனது கணவரின் உடல் நிலை குறித்து ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.
பிரேமலதா வீடியோ..
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தனது வீடியோ பதிவில் கேப்டன் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக வீடு திரும்பி அனைவரையும் சந்திப்பார் எனவும் கூறியுள்ளார்.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.- திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/sbzd0FDOX4
— Vijayakant (@iVijayakant) December 2, 2023
மேலும், தான் 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில் கேப்டனின் உடல் நிலை குறித்து எந்த தவறான தகவல்களையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் அதையும் மீறி சில யூடியூப் சேனல்கள், விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சிபிஐக்கு மாறும் அமலாக்கத்துறை லஞ்ச வழக்கு! அடுத்த திருப்பம் என்ன?
விஜயகாந்தை நேரில் சந்திக்க சென்ற பிரபலங்கள்..
விஜயகாந்த், கடந்த 29ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து நேரில் நலம் விசாரிக்க திரை பிரபலங்கள் சிலர் சென்றனர். நடிகர் சங்க உறுப்பினரும் நடிகருமான நாசர், லிங்குசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று விஜயகாந்தை பார்க்க முயற்சித்தனர். அப்போது அவர்களை சந்தித்த மருத்துவர்கள், கேப்டன் நலமுடன் உள்ளதாக தெரிவித்ததாக கூறினர். இதையடுத்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ரசிகர்கள் பிரார்த்தனை..
கேப்டன் விஜயகாந்த், நடிகராக இருந்த போதிலும் சினிமாவை விட்டு விலகிய போதிலும் ரசிகர்களையும் மக்களையும் தொடர்ந்து சந்தித்து சமூக நலப்பணிகளை செய்து வந்தார். அவர்களுடனும் உரையாற்றி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் வீட்டை விட்டே வெளியில் வர முடியாத நிலையில் இருந்தார். அவ்வப்போது இவரது புகைப்படங்கள் வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள், கேப்டன் மிகவும் ஒல்லியாகவும் உடல் குன்றியும் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, ரசிகர்கள் பலர் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஒரு ரசிகர், “என் உடலில் எந்த உறுப்பு வேண்டுமோ அதை எடுத்து கேப்டனுக்கு வையுங்கள்..” என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ