விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தல்

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பாலக்காடு மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2020, 09:26 AM IST
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தல் title=

திருப்பூர்: தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பஸ்-லாரி மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, கேரளா முதல்வர் அலுவலகம் (சி.எம்.ஓ - CMO) விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பாலக்காடு மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இந்த விபத்து சம்பவத்தில் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கான நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

 

மேலும் கேரளா முதலமைச்சர் அலுவலகம் சர்பி தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்புடன் சாத்தியமான அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 

கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். 20 பேர் இறந்ததாக அஞ்சினர் மற்றும் பலர் காயமடைந்தனர். கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குநர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார் என கேரள போக்குவரத்து அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

 

பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக தமிழ்நாட்டின் அவினாசி நெடுஞ்சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி மோதிக்கொண்டதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட இருபது பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபத்தி மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் சென்ற அரசு சொகுசு பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிச்சென்ற லாரியும் மோதிக்கொண்டதில், இந்த கோர விபத்து அவிநாசி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

Trending News