தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுவையில் நேற்றிரவு முதல் ஆங்காங்கே மழை பொழிந்து வரும் நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது...
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும்.
கடந்த, 24 மணிநேர விவரங்களின்படி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7cm மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. எனவே மீனவர்கள் இன்று தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்!