சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகி வருகின்றன. தற்போது வரை வெளியான முடிவுகளை வைத்து பார்த்தால், மொத்தம் உள்ள 5067 இடங்களுக்கு திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது திமுக 2,333 இடங்களிலும், அதிமுக 2184 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அதேநேரத்தில் முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியின் அனைத்து வார்டுகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதாவது எடப்பாடி ஒன்றியத்தில் இருக்கும் 13 கவுன்சிலர் பதவிகளில் 9 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் பாமகவும் வென்றுள்ளது.
சேலம் மாவட்டம் தமிழக முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான என்பதால், பலரின் கவனம் சேலம் மாவட்டத்தின் மீது தான் இருந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 13 இடங்களை அதிமுக கைப்பற்றி உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.