திருநெல்வேலியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின்பு பேசிய அவர், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி சொல்லுகிறேன். மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசு எடுத்து நடத்த வேண்டும் அல்லது ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் அரசு கொடுக்க வேண்டும். ஐந்து தலைமுறைகளாக அவர்கள் அங்கே இருக்கின்றனர், மாஞ்சோலை மக்களுக்கான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் போராட்டம் தொடரும். சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் அப்போதுதான் உண்மை வெளிவரும். தமிழக படுகொலைகள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க | என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலு
திமுக ஆட்சியில் அதிக அளவில் கொலைகள் நடைபெறுகிறது. எங்களைப் போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியா முழுவதும் சுற்றி பயணம் எனக்கு இந்த பாதுகாப்பு போதும் உள்ளதாக இல்லை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அதிமுக ஆட்சியில் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. திருமாவளவன் கிருஷ்ணசாமி, மற்றும் என்னை போன்ற தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெரியவர்கள் ஆகிவிடலாம் என்று எண்ணம் அதிக அளவில் இருக்கிறது. கூலிப்படை அதிக அளவில் இருப்பது வேலை வாய்ப்பு இல்லாதது கஞ்சா இருப்பதுதான் காரணம். தமிழ்நாட்டில் என்கவுண்டர் செய்யப்படுவதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழ கத்திற்கு உடன்பாடு கிடையாது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
மது கஞ்சாவே இல்லை என்றால் 90% கொலை குற்றம் குறைந்துவிடும். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பிபிடிசி நிர்வாகத்திடம் தமிழ்நாடு அரசு பணம் வாங்கி விட்டது. தமிழ்நாட்டின் அரசு இயந்திரம் செயலிழந்து விட்டது. ஏழை எளிய மாணவர்கள் படித்து மருத்துவராகுவதற்கு காரணம் நீட், நீட் கட்டாயம் வேண்டும் என ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ