Shiva Shankar Baba: 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிவசங்கர் பாபா

டெல்லியில் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2021, 11:45 AM IST
  • 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிவசங்கர் பாபா
    16ஆம் தேதி டெல்லியில் கைது
    17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர், ஜாமீன் மனு தள்ளுபடி
Shiva Shankar Baba: 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிவசங்கர் பாபா title=

சென்னை: தன்னைத்தானே கடவுள் என்று கூறிக் கொண்ட சிவசங்கர் பாபா வியாழக்கிழமையன்று (ஜூலை 17, 2021) செங்கல்பட்டில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை 1ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பள்ளி மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றப்பிரிவு சிஐடி (Crime Branch CID (CB-CID)) போலீசாரால் டெல்லியில் சிவ சங்கர் கைது செய்யப்பட்டார்.

அவரது சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. 

இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள், நிறுவனர் சிவ சங்கர், அவரது வழக்கறிஞர் நாகராஜ் என அவர் சம்பந்தப்பட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.  

இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்களைத் துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டம் (Tamil Nadu Prohibition of Harassment of Women Act) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிவ சங்கர் மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கடந்த வாரம் மூன்று வழக்குகளை பதிவு செய்தது.  

Also Read | CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது

உடல்நலக் குறைவால், உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் மருத்துவமனையில் சிவ சங்கர் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் சார்பில் கூறப்பட்டது. அவரை கைது செய்ய தமிழக சிபி-சிஐடி அந்த மருத்துவமனைக்கு சென்ற போது அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். பிறகு தேடுதல் வேட்டையை தொடர்ந்த போலீசார், டெல்லியின் சித்தரஞ்சன் பார்க் என்ற பகுதியில்  அவரை கைது செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் இருந்து போக்குவரத்து ரிமாண்ட் வாரண்ட் பெற்ற பின்னர் அவர் புதன்கிழமை நள்ளிரவு, சென்னைக்கு  அழைத்து வரப்பட்டார்.

விசாரணைக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட சிவ சங்கர், செங்கல்பட்டு மஹிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடல்நிலையை காரணம் காட்டி, அங்கு அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, சிவ சங்கர் செங்கல்பட்டு துணை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபா என்று அறியப்படும் சிவ சங்கர் மீதான புகார்கள் இருந்தால் அதை மொபைலிலும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் என்று சிபி-சிஐடி தெரிவித்துள்ளது விசாரணை அதிகாரி டி.எஸ்.பி குணவர்மன் தொலைபேசி எண் 98405 58992; இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மொபைல் எண் 98406 69982; மின்னஞ்சல் முகவரி inspocu2@gmail.com.

Also Read | சிக்கலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி: அங்கீகாரம் ரத்தாகுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News