சிவகார்த்திகேயனுக்கு அபுதாபியில் இருந்து வந்த வாழ்த்து..!

பொங்கல் நாளன்று குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு அபுதாபியில் இருந்து பாராட்டும், வாழ்த்தும் ஒரேசேர வந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2022, 12:48 PM IST
சிவகார்த்திகேயனுக்கு அபுதாபியில் இருந்து வந்த வாழ்த்து..! title=

கலப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் டிவிக்குள் நுழைந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய அசாத்திய திறமையால் அந்த தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக உருவெடுத்தார். காமெடியிலும், டைமிங் கவுண்டரிலும் கலக்கிய அவர் வெகு சீக்கிரமே தமிழகத்தில் ’நம்பர் ஒன்’ நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற அந்தஸ்தை அடைந்தார். தொலைக்காட்சியில் கலக்கிக் கொண்டிருந்த அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் தேடி வந்தன.

ALSO READ | மிரட்டலாக வெளியாகியுள்ள 'யானை' படத்தின் டீசர்!

நடிகர் தனுஷின் ’3’ திரைப்படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்த அவர், மெரினா மூலம் ஹீரோவாக மாறி இப்போது தமிழ் திரையுலகின் உட்ச நடத்திரமாகவும் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன், மகன், மகள் மற்றும் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டார். வாழ்த்தோடு கூடிய அவரின் இந்தப் புகைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஸ்பெஷல் வாழ்த்தாக அபுதாபியில் இருந்தும் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் வாழ்த்து வந்தது.

அபுதாபியில் பணியாற்றும் லெபனான் பெண் பத்திரிக்கையாளர் கடா மகோல் (Ghada Makhoul), சிவகார்த்திகேயனுக்கு இந்த ஸ்பெஷல் பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். மேலும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அவரின் உடைகளும், பாசிடிவ் ஆட்டிடியூடன் இருக்கும் அவரின் குணாதிசயமும், குடும்பம் மற்றும் ரசிகர்கள் மீது காட்டும் அன்பும் தன்னை வியக்க வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், அவரை பொங்கல் கொண்டாட இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ALSO READ | குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News