Beauty Tips For Women Tamil | பெண்கள் முக அழகு பொலிவாக இருக்க பல வகையான பியூட்டி ஹேக்குகளை பயன்படுத்துகின்றனர். சிலர் காஸ்டிலி அழகு குறிப்புகளை பின்பற்றி கூடுதல் செலவு செய்கின்றனர். ஆனால், வீட்டில் வேகவைத்த அரிசி கஞ்சி வழியாகவே முக பொலிவை பெற்றுவிட முடியும். பத்து பைசா செலவில்லாமல் செய்யக்கூடிய சிம்பிளான ஹேக் இது. அரிசி கஞ்சியில் இருக்கும் அழகு ரகசியம் பழங்காலத்திலிருந்து இன்று வரை பெண்கள் கடைபிடிக்கின்றனர். இது 100% இயற்கையானது, பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் அரிசி கஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
அரிசி கஞ்சியில் உள்ள சத்துக்கள்
பொதுவாக அரிசி நீரில் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை ஹைட்ரேட் செய்து, பளபளப்பாக இருப்பதை ஊக்குவிக்கும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்து கலவை உள்ளது. வேகவைத்த அரிசி நீரில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை சேதமடைந்த சருமத்தை சரிசெய்து மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும். வைட்டமின்கள் பி மற்றும் ஈ இருப்பதால், சருமத்தை பொலிவாக்குகிறது. எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. முடிகள் இறுக்கமாக இருக்காமல், நெகிழ்ச்சித்தன்மையை கொடுக்கிறது. அரிசி கஞ்சியில் இருக்கும் சத்துக்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. வேகவைத்த அரிசி கஞ்சி தோல் மற்றும் முடி அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. அதேசமயம் செல்களை மீளுருவாக்கம் செய்வதுடன், வயதான செயல்முறையை குறைக்கிறது.
மேலும் படிக்க | சமைக்கும் போது அனைவரும் செய்யும் தவறு இதுதான்! என்னனு தெரிஞ்சுக்கோங்க!
எப்படி தயாரிப்பது?
வேகவைத்த அரிசி கஞ்சியை தயாரிப்பது ஒரு எளிய செயல்முறையாகும், அரிசி நீரைப் பயன்படுத்துவதில் இரண்டு பிரபலமான முறைகள் இருப்பதால், அவை இரண்டையும் பார்ப்போம்.
அரிசி கஞ்சி கொதிக்கும் முறை
* சமைக்காத அரிசியை அரை கப் எடுத்து நன்கு கழுவ வேண்டும்.
* பின்னர் தண்ணீரின் அளவை அரிசியின் அளவில் இரட்டிப்பாக்கி ஊற்றி வேக வைக்க வேண்டும். அரிசி வெந்ததும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வடிகட்டி, ஆறவிடவும்.
* இதை ஒரு வாரம் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும். அதன்பின்னர் எடுத்து அப்படியே முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம்.
இன்னொரு முறை என்னவென்றால் அரிசி கஞ்சியை அப்போதே ஆற வைத்து உடனே அப்ளை செய்து கொள்ள வேண்டியது தான். ஒரு வாரம் பிரிட்ஜில் வைத்து அப்ளை செய்ய முடியாதவர்கள் இந்தமுறையை பின்பற்றலாம். உங்களுக்கு எந்த ரிசல்ட் நன்றாக இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த ரிசல்டை பின்பற்றிக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ