ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!

Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Written by - RK Spark | Last Updated : Nov 29, 2024, 03:17 PM IST
    ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
    அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு.
    தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.
ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!  title=

தமிழகத்தில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நேரடியாக பண உதவி, மாணவர்களுக்கு மதிய உணவு, மருத்துவமனை தொடர்பாக நலத்திட்டங்கள் என பல உதவிகளை அரசு செய்து வருகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து மக்களுக்கு சென்றடைய தமிழக அரசு கடுமையாக உழைத்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டங்கள் உண்மையில் தேவையான மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்த அரசு விரும்புகிறது. மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்று சேர அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. எனவே அந்த அந்த பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் யாருக்கு உதவி தேவை என்பதை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் பெறுவதை உறுதிசெய்வது முக்கியம்.

மேலும் படிக்க | பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கெல்லாம் நாளைக்கு மட்டும் லீவ்? எங்கெல்லாம் 2 நாளும் லீவ்?

தலைமைச் செயலாளர் முருகானந்தம் முக்கிய அறிவிப்பு!

அரசு அதிகாரிகள் ஒவ்வொரு நகரங்களிலும் அனைத்தும் சீராக உள்ளதாக என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதி, சாலை வசதி, மின் இணைப்பு போன்றவற்றை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் அரசு ஊழியர்கள் உடனே அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் அல்லது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை அரசு ஊழியர்கள் சரி செய்யவில்லை என்றால் அது அரசுக்கு தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு முக்கிய செய்தியை தெரிவித்துள்ளார். 

அதன்படி, தினமும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கோரிக்கைள் மீது நடவடிக்கை எடுக்க அதிக காலம் எடுத்து கொள்ளப்படுவதால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில சமயம் மக்களின் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, மக்களின் புகார் மனுக்களை பெற்று ஒரு மாதத்திற்குள்  அந்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் புகார் அளிக்கும் போது, ​​மூன்று நாட்களுக்குள் ஒப்புகை சீட்டு கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் புகார் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள அப்டேட் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.  

உடனடி நடவடிக்கை வேண்டும்!

மக்களிடம் இருந்து வரும் புகார்களை சரி செய்ய அரசு ஊழியர்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு கடிதம் மூலம் அரசு ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு உதவ முடியாவிட்டால், ஒரு மாதத்திற்குள் அது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்தி, மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இனி வரும் காலங்களில் அரசு அலுவலகங்கள் முறையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Live Today : புயல், கனமழை எச்சரிக்கை, பள்ளிகள் விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News