சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தனியார் ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் முயற்சியில் இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நிறுவனம் துவங்கி இன்று 10வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஊழியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் கொடுத்துள்ளார்.
நிறுவனத்தின் அனைத்து ஏற்ற இறக்கத்திலும் தன்னோடு பயணித்து கம்பெனியின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஐந்து பேருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ சொகுசு காரை நிறுவனர் சுரேஷ் பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க | Good News! Rs 9200 கோடி மதிப்புள்ள பங்குகளை Infosys திரும்ப பெறுகிறது
இதற்காக ‘கெட் டூ கெதர்’ பார்ட்டி என 5 பேரின் குடும்பத்தினரையும் அழைத்த நிறுவனர், திடீரென ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ சொகுசு காரை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார். காரை பெற்றுக் கொண்ட ஊழியர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர்.
இதுகுறித்துப் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம், ‘கம்பெனி துவங்கியது முதல் தற்போது வரை என்னோடு பயணித்து வரும் ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும் என்னைவிட்டுச் செல்லவில்லை. அதிக ஊதியம் தருவதாக பிற கம்பெனிகள் அழைப்பு விடுத்தும் அந்த ஊழியர்கள் என்னை விட்டுச் செல்லாமல் தொடர்ந்து உழைத்தனர். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை குடும்பதோடு கெட் டூ கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறோம்’ என்றார்.
பின்னர் காரை பரிசாக பெற்ற விவேக் கூறுகையில், ‘எதிர்பார்க்க முடியாத இன்பதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் சி.இ.ஓ.! குடும்பமே மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். எனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு அனுபவம் இல்லாமல் இந்த கன்பெனியில் சேர்ந்தேன். தற்போது 10 ஆண்டுகளை கடந்திருக்கிறோம். ஒன்றிணைந்து உழைத்ததற்கான பரிசாக கார் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.
மற்றொரு ஊழியர் ஆதி பேசுகையில், ‘எப்படியாவது கார் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த கனவை சி.இ.ஓ நனவாக்கிவிட்டார். என்னிடம் ஒரு முறை விளையாட்டாக கேட்டார். என்ன கார் பிடிக்கும் ? என்று. நானும் பி.எம்.டபுள்யூ என இயல்பாகச் சொன்னேன். ஆனால் அந்த காரையே பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார். நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | உலகிலேயே இந்தியாவில்தான் சிலிண்டர் விலை அதிகம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR