தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரம் மாற்றப்படும் என உச்சநீதிமன்ற அறிவிருத்தியுள்ளது...!
சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்க்கு தடை செய்யவேண்டும் எனக்கூறி சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு நாடு தீர்ப்பு வழங்கியது. அதில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாது. பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது உச்ச நீதிமன்றம். அதில் குறிப்பாக தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரை முக்கால் மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்க்கான இரவு 8 மணி முதல் 10 மணி வரை இருக்கும் நேரத்தை, காலை அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி. எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்ற நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
Supreme Court ordered the bursting of firecrackers in Tamil Nadu during Diwali for two hours. The two-hour slot has to be decided by the state government.
— ANI (@ANI) October 30, 2018