தென்மேற்கு வங்க கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற இருக்கிறது. இதற்கு மிக்ஜாம் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பாதையை தீவிரமாக கண்காணித்து வரும் இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னைக்கும், மச்சிலிபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என கணித்துள்ளது. இருப்பினும் டிசம்பர் 1 ஆம் தேதி மாலை அல்லது டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வைப் பொறுத்து அதன் பாதையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க | புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் - மக்களே உஷார்
எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இருக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் புயலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் ஆபத்தான பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவும், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் முன்னச்செரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " புயல் எச்சரிக்கை பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். மக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கான சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதால் அதில் கவனம் செலுத்த வேண்டும். மண்டல குழுக்களை அமைக்க வேண்டும் அதை மாவட்ட ஆட்சி தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு துறையினர் என அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். புயல் சின்னத் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும். மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியம் சார்பில் கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்" என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ