சிறப்பு அதிகாரம்.. 10 மசோதாக்களை ஒப்புதல் பெற்றதாக அறிவிக்க வேண்டும் -தமிழ்நாடு அரசு கோரிக்கை

Tamil Nadu Government News: 10 பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்பட வேண்டும் என அறிவிக்க எழுத்துப்பூர்வமான வாதத்தை தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 23, 2025, 05:45 PM IST
சிறப்பு அதிகாரம்.. 10 மசோதாக்களை ஒப்புதல் பெற்றதாக அறிவிக்க வேண்டும் -தமிழ்நாடு அரசு கோரிக்கை title=

TN Governor vs TN Govt: மசோதாக்கள் மீதான விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான வாதத்தை எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு அரசாங்கம் மனு தாக்கல் செய்தது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது உச்ச நீதிமன்றம் எழுப்பிய 12 கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பத்து பல்கலைக்கழக மசோதாக்கள் மீதான ஒப்புதலை, ஆளுநரின் ஒப்புதலை பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக கோரிக்கையை தங்கள் தரப்பு வாதமாக தமிழ்நாடு அரசாங்கம் கூறியுள்ளது. 

மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் பொன்னசிங், ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள தங்கள் மனுவில் கோரிக்கையாக இந்த வாதத்தை முன் வைத்துள்ளார்கள்.

ஆளுநருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் செயல்பட முடியாது. அரசு சாசன பிரிவு 200 படி மட்டுமே செயல்பட முடியும் என்று விரிவான அரசு சாசன அதிகாரங்களை தமிழ்நாடு அரசு இந்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் கூறியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் ஆளுநருடைய இந்த கால தாமதம் செய்தது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு, இரண்டாவது முறையாக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கையும் வலியுறுத்திப்பட்டு இருக்கிறது. 

இந்த வழக்கில் மிக முக்கியமாக ஆளுடைய அரசு சாசன பிரிவு 200 படி செயல்படாத காரணத்தால், அனுப்பிய அந்த பத்து மசோதாக்கள், அதாவது குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் மீதான ஒப்புதலை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தின் 142 வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் முன்வைத்துள்ளார்கள். அதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, இந்த ஒரு கோரிக்கையை தமிழக அரசாங்கமானது முன்வைத்துள்ளது. 

ஆளுநருடைய செயலற்ற தன்மையை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் பேரழிவாளன் விவகாரத்தில் உத்தரவை குறிப்பிட்ட நிலையில், அதேபோல இந்த மசோதாக்கள் மீதான ஒப்புதலையும் கருத வேண்டும். ஆளுனர் செயலற்று இருப்பதன் காரணமாக ஒப்புதலை பெறப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை இந்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் தமிழ்நாடு அரசாங்கமானது புதிதாக வலியுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க - கீழக்கரை ஜல்லிக்கட்டு 2025: சீறிப்பாயும் சிறந்த காளைகள்; மீண்டும் முதல் பரிசை வெல்வாரா அபிசித்தர்?

மேலும் படிக்க - ரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி

மேலும் படிக்க - முடிந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்க - அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News