சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தமிழக அரசின் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறுவதாக சுகாதாரத் துறை அறிவித்தது. தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சட்டத்தின் படி தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு செல்லும்.
முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது தமிழக அரசு. கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அரசின் நிலையான வழிகாட்டுதலான தனிமனித இடைவெளி , முகக் கவசம் அணிதல் மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்,
இனி கொரனோ தொடர்பாக அரசின் சார்பில் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா
தடுப்பூசி (vaccination), முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், தமிழக சுகாதாரத் துறை பொது சுகாதார துறை சட்டத்தில் கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் இரு ஆண்டுகளாக உலகமே தத்தளித்து வந்த நிலையில், தடுப்பூசிகளே ஆட்கொல்லி நோய்க்கு அரணாக வந்து சேர்ந்தது.
இந்தியா முழுவதிலும், மத்திய மாநில அரசுகளின் கடும் முயற்சிகளால் மக்களில் பெரும்பாலனவர்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பு கிடைத்துள்ளது.’தமிழகம் முழுவதும், கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டமும் செயல்ப்டுத்தப்பட்டது.
தற்போது இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் தகுதியுள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | உஷார் மக்களே! மாரடைப்புக்கு முன் ஏற்படும் மாற்றங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR