Ration shop open status Tamil | தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை வருவதால் ரேஷன் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி திறந்திருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதனால், இதுவரை ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். நாளை நீங்கள் பொருள் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் ஊரில் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் ரேஷன் கடை திறந்திருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? என்பதை இங்கே பார்க்கலாம்.
ரேஷன் கடை திறந்திருப்பதை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
* ரேஷன் கடை திறந்திருப்பதை தெரிந்து கொள்ள முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும்
* அங்கு ’பொது விநியோக திட்ட அறிக்கைகள்’ என்ற ஆப்சன் இருக்கும். அதனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்
* திரையில் தோன்றும் பக்கத்தில் நீங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர், நீங்கள் வசிக்கும் பகுதி அகிய தகவல்களை தேர்வு செய்யவும்.
* இந்த விவரங்களை உள்ளிட்டவுடன் உங்கள் ஊர் ரேஷன் கடை பெயருடன் திரையில் தோன்றும். கடை திறந்திருக்கிறது என்றால் பச்சை கலரில் ONLINE என்ற ஆப்சன் காண்பிக்கும்.
* ஒருவேளை கடை மூடியிருந்தால் Offline என சிவப்பு நிறத்தில் காண்பிக்கும்.
பொருள் இருப்பு நிலை தெரிந்து கொள்ளுங்கள்
கூடவே நீங்கள் ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் இருப்பு நிலை குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் மொபைலில் இருந்து 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, PDS <இடைவெளி> 101 - நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள் என டைப் செய்து அனுப்பினால் எஸ்எம்எஸ் மூலம் பொருட்களின் இருப்பு விவரங்கள் உங்களுக்கு உடனே வரும். இதன் மூலம் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நீங்கள் ரேஷன் கடைக்கு செல்வது குறித்து திட்டமிடலாம். ஒருவேளை நீங்கள் பொருட்களின் இருப்பு நிலை பார்த்து கடைக்கு சென்றபோது, விநியோகிப்பாளர் அந்த பொருள் இல்லை என்று சொன்னால் உடனே நீங்கள் அங்கிருந்தபடியே ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
ரேஷன் கடை புகார் அளிப்பது எப்படி?
https://www.tnpds.gov.in/ என்ற பக்கத்திலேயே புகார் பகுதி இருக்கும். அந்த ஆப்சனை நீங்கள் தேர்வு செய்தால் உங்களின் புகார்களையும் அளிக்கலாம். மேலும், பயனாளிகள் ஏற்கனவே செய்த புகார்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, புதிய குடும்ப உறுப்பினரை சேர்ப்பதையும் இங்கே விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | Ration shop | ரேஷன் கடை மீது புகார் அளிக்க இந்த எண்ணுக்கு SMS தட்டிவிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ