Ration Card Application Reject, Tamilnadu | தமிழ்நாடு அரசு புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற தொடங்கியுள்ளது. இதனால் 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 2.65 விண்ணப்பங்களில் சுமார் 1.36 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரே வீட்டில் வசிப்பவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. புதிதாக திருமணமானவர்களாக இருந்தால் ஏற்கனவே ரேஷன் கார்டில் இருந்த பெயரை நீக்கியதற்கான சான்றிதழ் கொடுக்க வேண்டும். திருமணச் சான்றிதழ் மற்றும் பத்திரிக்கை கொடுக்க வேண்டும். இந்த ஆவணங்கள் எல்லாம் முறையாக சமர்பிக்காத விண்ணப்பதாரர்களின் ரேஷன் கார்டு விண்ணப்பம் அதிரடியாக நீக்கப்படுகின்றன.
மேலும், வட்டார உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கள ஆய்வில் விசாரணை நடத்துகின்றனர். அவர்களது விசாரணையில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுத்துள்ள தகவல்கள் உண்மையானதா? என விசாரிக்கப்படுகிறது. அதில் ஏதேனும் போலி தகவல்கள் இருந்தாலும் ரேஷன் கார்டுகள் நிராகரிக்கப்படுகின்றன. அதேபோல் தனித்தனி எல்பிஜி கனெக்ஷன் இல்லாமல் இருப்பவர்களுக்கும் ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "விண்ணப்பதாரர்கள் ஒரே வீட்டில் வசிப்பவராகவும், சொந்த சமையலறை இல்லாமல் இருப்பவர்களாகவும் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்களை நிராகரிக்க முடியும். அதேபோல் ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு தேவையான ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். கள ஆய்வில் வசிக்கும் இடம் மோசடியாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். வேறு எந்த காரணங்களுக்காகவும் ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 4.26 லட்சம் விண்ணப்பங்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு வந்திருந்த நிலையில், அதில் 1.99 லட்சம் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் விளக்கமளித்தார்.
இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை மந்தமாக இருப்பதாக அதிருப்தி நிலவுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு தேவை என்பதால் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை குறைந்தபட்சம் 5 மாதங்களுக்குப் பிறகே நடக்கிறது. சில இடங்களில் விண்ணப்பங்களில் உள்ள சிறிய தவறுகளுக்கு கூட, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. உடனடியாக சரி செய்து தரக்கூடிய தகவலாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அரசு ஊழியர்கள் நிராகரிக்கின்றனர். இதனால் மீண்டும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய சிரமத்துக்கும் மக்கள் ஆளாகின்றனர்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
ஆதார் கார்டு, திருமணச் சான்றிதழ் அல்லது திருமண பத்திரிக்கை, வாடகை வீட்டில் இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு பில், விதவை என்றால் விதவை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாகவும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணபிக்கலாம்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 கிடைக்குமா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ