பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Dec 23, 2024, 01:41 PM IST
  • தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.
  • 1000 ரூபாய் பணம் வழங்க வாய்ப்பு!
  • விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்! title=

பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்கும். தற்போது தமிழகத்தில் ​​2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன, 1.54 கோடி புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும், தை பொங்கலை முன்னிட்டு பரிசு பொருட்களை வழங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. இது குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | விஜய் எனது தம்பி! அவர் எனது எதிரி அல்ல - நாம் தமிழர் சீமான் பேட்டி!

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புகளுடன் 1000 ரூபாய் தொகையும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்கள் கிடைக்குமா என்றும் அல்லது வேறு ஏதாவது கூடுதலாக கிடைக்குமா என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த முறை 1000 ரூபாய் பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தலாமா என்பது பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு என்னென்ன பரிசு பொருட்கள் கிடைக்கும், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை சோஷிங்கநல்லூரில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அங்கு அவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும் என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொங்கல் பரிசுகள் குறித்த செய்திகளை அடுத்த வாரம் முதல்வர் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் தொடர்பாக வேளாண் துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும் என்பதை முதல்வர் தான் அறிவிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் 35,000 ரேஷன் கடைகள் உள்ளன, அங்கு மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் உதவிகள் மக்களுக்கு சென்று சேருகிறதா என்பதையும் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தையும் பின்பற்றி வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம், 1.14 கோடி பேர் பயன் பெறுகின்றன. 1.04 கோடி பேருக்கு இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு  மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசாக கொடுத்த நிறுவனம்... வேற எங்கையும் இல்ல... நம்ம சென்னையில்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News