EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் போன்ற EPFO திட்டங்களின் பலன்களைப் பெற UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இப்போது UAN எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி 2025 ஜனவரி மாதம் 15ம் தேது என. முன்னதாக இந்த காலக்கெடு 2024 நவம்பர் 30ம் தேதியாக இருந்தது, பின்னர் அந்த காலக்கெடு 2024, டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது கலக்கெடு மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ELI திட்டத்தின் பலன்களைப் பெறுவதில் எந்தத் தடையும் ஏற்படாத வகையில், புதிய காலக்கெடுவிற்கு முன் இந்தச் செயல்முறையை முடிக்க வேண்டும் என தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் EPFO வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைப்பது அவசியம். ELI திட்டத்தின் பலன்களைப் பெற, அனைத்து ஊழியர்களும் இந்தச் செயல்முறையை ஜனவரி 15, 2024க்குள் முடித்திருப்பதை முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் EPFO கூறியுள்ளது.
EPFO வெளியிட்ட வழிமுறைகள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து முதலாளிகளுக்கும் தங்கள் ஊழியர்களின் யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆக்டிவேட் செய்யவும், வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு - இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் பலன்களைப் பெற இந்த செயல்முறை கட்டாயமாகும். இத்திட்டத்தின் பலன்களை சரியான நேரத்தில் பெறுவதற்கு, புதிய பணியாளர்கள் முதல் அனைவரின் தகவலையும் புதுப்பிக்குமாறு முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ELI திட்டத்தின் நோக்கம்
2024 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ELI திட்டம் குறித்து அறிவித்தார். திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், 2 ஆண்டுகளில் 2 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதும் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!
ELI திட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
திட்டம் A: புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தும்போது நிறுவனங்களுக்கு ₹15,000 மானியம் கிடைக்கும். இது மூன்று தவணைகளில் வழங்கப்படும்.
திட்டம் B: உற்பத்தித் துறைக்கு சிறப்புத் திட்டத்தில் புதிய ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ஊழியருக்கு மாதந்தோறும் ₹ 3,000 கிடைக்கும்.
திட்டம் C: பல்வேறு தொழில்களில் பணியாளர்களை அதிகரிக்க பொது ஊக்கத்தொகை வழங்கப்படும்.
UAN எண்ணை ஆக்வேட் மற்றும் இணைப்பதன் முக்கியத்துவம்
அனைத்து உறுப்பினர்களின் UAN ஆதாருடன் இணைக்கப்பட்டு ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று EPFO கூறியுள்ளது. இதன் மூலம் ஊழியர் PF பாஸ்புக்கைப் பார்க்கவும், ஆன்லைன் க்ளெய்ம் செய்யவும் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்கவும் எளிதாகிறது. இது தவிர, எந்த ஒரு அரசின் திட்டத்தின் பலன்களையும் நேரடியாக வங்கிக் கணக்கில் பெற ஆதார் இணைப்பு அவசியம்.
UAN ஆக்டிவேட் செய்யும் முறை
1. EPFO போர்ட்டலான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரிக்கு செக்கவும்
2. Activate UAN' என்பதைக் கிளிக் செய்து, UAN எண், ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
3. OTP மூலம் சரிபார்த்து கடவுச்சொல்லை உருவாக்கவும்.
மேலும் படிக்க | புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ