தவெக தலைவர் விஜய்யை மீண்டும் விளாசிய திருமாவளவன்

Thirumavalavan, Vijay | தவெக தலைவர் நடிகர் விஜய், நீங்களும் பாசிஸ்டுகள் திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது இந்தியா கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளையும் சொல்கிறாரா என திருமாவளவன் கேள்வி.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 29, 2024, 07:18 PM IST
  • விஜய்க்கு கொள்கை தெளிவு இல்லை
  • அவருடைய பேச்சில் பல குழப்பங்கள்
  • விசிக தலைவர் திருமாவளவன் சாடல்
தவெக தலைவர் விஜய்யை மீண்டும் விளாசிய திருமாவளவன் title=

Thirumavalavan | திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அம்மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். நடிகர் விஜய் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் என்றும், எதிர்பார்த்த அளவிற்கு எந்தவித செயல் திட்டங்களும் இல்லாமல் பல்வேறு யுகங்கள் அடிப்படையில் நடிகர் விஜய் பேசியதாகவும் திருமாவளவன் கூறினார். தன்னுடைய நண்பர்கள் யார் என்று அடையாளம் காட்டுவதை விட, தன்னுடைய எதிரிகள் யார்? என்று அடையாளம் காட்டுவதில் ஆர்வமாக இருந்தார் என்றும், பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல்வாத சக்திகள் இரண்டாவது எதிரி என்று குறிப்பிட்டிருக்கிறார் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து திருமாவளவன் பேசும்போது, " ஊழல்வாத சக்திகள் என்று நடிகர் விஜய் சொல்லும்போது வெளிப்படையாக சொல்லவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று முன்மொழிகிறார் என மகிழ்ச்சியடையும் வேளையில், சிறுபான்மை பெரும்பான்மை என்ற அரசியலில் உடன்பாடு இல்லை என்று விஜய் பேசுகிறார். பெரும்பான்மை வாதத்தை பேசுகிறவர்கள் யார்?, அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பான்மை பேசும் ஒரே கட்சி பாஜக. அதற்கு துணையாக சங்பரிவார் கட்சி இருக்கிறது. இதனால் சிறுபான்மையை சேர்ந்தவர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. சிறுபான்மை, பெரும்பான்மை என்ற அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என்ற அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என மேம்போக்காக சொல்லிவிட்டு நடிகர் விஜய் கடந்து போகிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர், பௌத்தர் போன்ற சிறுபான்மையினர்களின் பாதுகாப்பு குறித்து அவர் என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என புரிந்து கொள்ள முடியவில்லை" என கூறினார்.

மேலும் படிக்க | பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை -தமிழக அரசு உத்தரவு

பாசிச எதிர்ப்பை பற்றி பேசிய நடிகர் விஜய் அதனை கிண்டல் அடித்து விட்டு பாசிசம் ஒன்றுமே இல்லை என்பது போன்று கடந்து செல்வதாகவும் திருமாவளவன் கூறினார். அவங்க பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா என்ற பேச்சுக்கு இரண்டு பொருள் உள்ளதாகவும், பாசிச எதிர்ப்பு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம், நீங்களும் பாசிஸ்டுகள் தான், ஜனநாயக சக்திகள் இல்லை எனவும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா? என திருமாவளவன் கேள்வி எழுப்பினார். நடிகர் விஜயின் பேச்சில் திமுக எதிர்ப்பு அதிகமாக வீசுவதாகவும், திராவிட மாடல் ஆட்சியை எதிர்ப்பதாகவும் குடும்ப ஆட்சி என்ற அடிப்படையில் கலைஞரின் குடும்பத்தை எதிர்க்கிறார் எனவும், திமுக கூட்டணியையும் இந்த விமர்சனத்திற்குள் நடிகர் விஜய் உட்படுத்துகிறார் என திருமாவளவன் தெரிவித்தார்.

நடிகர் விஜயின் இந்த பேச்சு அனைத்தும் திமுகவையும் திமுக அரசையும் எதிர்ப்பதாகவே உள்ளதாகவும், இந்த எதிர்ப்பு ஒன்றும் புதிய அரசியல் நிலைப்பாடு இல்லை எனவும், இந்த குரல் முதல் குரலும் அல்ல தமிழகத்தில் நீண்ட காலமாக திமுக மற்றும் திமுக அரசை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனவும், இந்த எதிர்ப்பு மக்களிடத்தில் உணர்த்த முடியவில்லை என தெரிவதாகவும், நடிகர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள் பல்வேறு பிரகடனங்கள் இல்லை எனவும், இந்த மாநாடு ஏமாற்றம் அளிப்பதாக திருமாவளவன் பேசினார்.

கூட்டணிக்கு வந்தால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு உண்டு என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இது குறித்து தற்போது பேசியிருக்கக் கூடாது எனவும், இன்னும் ஒன்னரை ஆண்டு காலம் திமுக ஆட்சி நடத்த உள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் இதுபோன்று கூட்டணி குறித்து வெளிப்படையாக அவர் பேசக்கூடாது எனவும் கூறினார். இது மறைமுகமாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும், யார் வேட்பாளர் என்பதெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடாது எனவும், விஜய்யின் இந்த நிலைப்பாடு திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு தான் என அவர் விமர்சித்தார். 

இது சரியான நேரத்தில் கையாளப்படவில்லை என்றும், கத்தியை யுத்த களத்தில் வீசுவதற்கு பதில் வெறும் இடத்தில் நடிகர் விஜய் கத்தியை வீசுகிறார் எனவும், அவருடைய பாணியில் அணுகுண்டு ஆனால் இது வெடிக்காத நிலையில் தான் இருக்கும் என திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News