தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தொற்று பரவல் முன்பை விட வேகமாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,983 ஆக இருந்த நிலையில், இன்று 8,981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது 2 ஆயிரம் பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\
ALSO READ | நீட் தமிழகத்திற்கு அவசியம் - அண்ணாமலை
சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிடுள்ள அறிவிப்பில் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 700 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டிருப்போரின் எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ALSO READ | இனி இந்த துறைகளுக்கும் TNPSC தேர்வு..!
இந்த எண்ணிக்கை உயர்வு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது இன்னும் கவலையை அதிகரித்துள்ளது. இதன்மூலம் மக்கள் மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. வேகமாக பரவும் கொரோனா வீதத்தை குறைக்கும் பொருட்டு மீண்டும் முழு லாக்டவுன் மட்டுமே தீர்வு என்கிற நிலையை நோக்கியே இப்போதைய சூழல் சென்று கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த நிலை உருவாகாமல் இருக்க வேண்டும் என்றால், மக்கள் அனைவரும் அத்தியாவசிய பயணத்தை தவிர்த்து மற்றவைகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR