சனிக்கிழமையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் - அரசு அறிவிப்பு

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 28, 2022, 04:06 PM IST
  • வணிகவரித்துறை பத்திரப்பதிவுத்துறையில் புதிய அறிவிப்பு
  • சனிக்கிழமைகளில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும்
  • அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
சனிக்கிழமையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் - அரசு அறிவிப்பு  title=

சட்டப்பேரவையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசினார். அதில், வணிகவரித் துறையில் கடந்த ஆண்டை விட ரூ.8,760.83 கோடி கூடுதலாக வருவாய் வசூலாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு பொறுப்பேற்றதும் வணிகவரித்துறையில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மறுசீரமைப்பு, தீவிர கண்காணிப்பு மற்றும் வணிகர்களுடனான கனிவான அணுகுமுறையின் விளைவாகவே இது சாத்தியமானதாகவும் தெரிவித்தார். பதிவுத் துறையிலும் அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட ரூ.3,270.57 கோடி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் மோடி - முதல்வர் முக ஸ்டாலின் காட்டம்

பதிவுத் தவறுகளும், ஆவணப்பதிவுகளும் அதிகமாக இருந்த பதிவுத்துறையில் வருவாயைப் பெருக்குவது சாத்தியமா என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், திமுக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்ட பல்வேறு அறிவு சார்ந்த செயல் திட்டங்களின் மூலம் சாத்தியப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வரி வருவாய் என்பது பதிவுத்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வருவாய் என அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவுப்புகளை அவர் வெளியிட்டார். அதில், அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்படும் என்று கூறினார். இதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும். “எனது விலைப் பட்டியல் எனது உரிமை" என்ற திட்டம் செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ஜிஎஸ்டி மென்பொருள் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். இதேபோல், வணிக வரித்துறையின் அழைப்பு மையம் மேம்பாடு, வணிக வரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கைப் பிரிவு உருவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.

மேலும் படிக்க | திமுக அரசு ஆன்மீக அரசாக செயல்படுகிறது - தருமபுரம் ஆதீனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News