தீபாவளி நாளில் சோகம்! பட்டாசுகள் வெடித்ததில் தந்தை-மகன் உடல் சிதறி பலி!

இரண்டு சக்கரவாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில்  தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை உடல் சிதறி உயிரிழந்தனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 4, 2021, 04:35 PM IST
தீபாவளி நாளில் சோகம்! பட்டாசுகள் வெடித்ததில் தந்தை-மகன் உடல் சிதறி பலி! title=

விழுப்புரம்: திடீரென பட்டாசுகள் வெடித்ததில் தந்தையும் மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர். தீபாவளி நாளில் இப்படி இரு ஒரு சம்பவம் நடந்ததை அடுத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆரோவில் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென வெடித்ததால் தந்தை- மகன் சம்பவ இடத்திலே உடல் சிதறி பலியானார்கள்.வெடி பொருள் வீரியம் அதிகமாக இருந்ததால் உடல் மற்றும் வாகன பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசிப்பட்டது.

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன்(37) இவர் தமிழகப்பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடம் தீபாவளி கொண்டாட இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார். 

அப்போது புதுச்சேரி அருகேவுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, இரண்டு சக்கரவாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில்  தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். 

இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை உடல் சிதறி உயிரிழந்தனர். அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூறைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர் இவர்கள் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரனை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் DIG பாண்டியன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து  ஆய்வு செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News