கோவை: இலங்கையில் பொருளாதார பிரச்சனைகள் என்பது தொடர்பாக அந்நாடு உலகத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இலங்கையில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இருக்கும் இரு குடும்பத்துக்கு இடையில் ஏற்பட்ட சிக்கலால் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கிருஷ்ண பிரகாஷ் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே முகாமில் ஜெயராணி என்ற பெட்ரோல் பங்க் ஊழியர் வசித்து வருகிரார்.
கிருஷ்ண பிரகாஷுக்கும், ஜெயராணிக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்ததாக தெரிகிறது. இது குறித்து ஜெயராணியின் கணவர் அந்தோனி பிரசாத்க்கு தெரிய வந்தது சிக்கல் ஏற்பட்டது. கோபமடைந்த அந்தோனி பிரசாத், தனது மனைவியையும் கூலித் தொழிலாளியான கிருஷ்ண பிரகாஷையும் கண்டித்தார்.
மேலும் படிக்க | போர் என்பது 21ம் நூற்றாண்டில் மிகவும் அபத்தமானது: ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ்
இதனால் கடந்த ஒரு ஆண்டாக ஜெயராணி, கிருஷ்ண பிரகாஷூடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கிருஷ்ண பிரகாஷ் ஜெயராணியை தொடர்பு கொள்ள முயற்சித்து, தன்னுடன் பேச வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் விலகியிருக்க விரும்பிய ஜெயராணி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ண பிரகாஷ் மது போதையில் ஜெயராணியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.
வீட்டில் இருந்த, ஜெயராணியின் அண்ணன் ஐவன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த ஐவன், கிருஷ்ண பிரகாஷிடம் இருந்த அதே கத்தியை பிடிங்கி குத்தியுள்ளார். இதில் கிருஷ்ண பிரகஷுக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிரகாஷ் மற்றும் ஐவன் ஆகிய இருவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR