கஜா சீரமைப்பு பணிக்காக ₹1,146 கோடி; மத்திய அரசு ஒப்புதல்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2018, 04:47 PM IST
கஜா சீரமைப்பு பணிக்காக ₹1,146 கோடி; மத்திய அரசு ஒப்புதல்! title=

கஜா சீரமைப்பு பணிக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, ₹1,146.12 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

கஜா புயல் நிவாரண நிதியாக ₹15,000  கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்தனர்.

தாக்கல் செய்த அறிக்கையில் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

இக்கூட்டதிதல் கஜா புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் உதவியாக ஆயிரத்து ₹1,146.12 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 3-ஆம் நாள் ₹353.70 கோடி கஜா சீரமைப்பு பணிகளுக்காக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News