திமுக துணை பொதுச் செயலாளரான கனிமொழி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். இவர் தனது தொகுதி பணியை மேற்கொள்ள தூத்துக்குடி ஐயப்பன் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று (நவ. 26) இரவு மக்களவை உறுப்பினர் கனிமொழி வீட்டில் இல்லாதபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக சிப்காட் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு வந்த சிப்காட் காவல் துறையினர் எம்.பி., கனிமொழி வீட்டுக்குள் புகுந்த நபரை பிடித்து, யார் அவர் ?, எதற்காக உள்ளே நுழைந்தார்?, திருடவதற்கு வந்தாரா அல்லது வேறு எதற்கும் உள்ளே நுழைந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனிமொழி வீட்டில் அடையாளம் தெரியாத நபர் அத்துமீறி உள்ளே நுழைந்ததை அடுத்து, அவரது வீட்டிற்கு ஆயுதப்படையைச் சேர்ந்த 4 காவலர்கள் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி வீட்டிலேயே மர்ம நபர் உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி, அண்மையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரானார். துணைப் பொதுச்செயலாளர் ஆன பிறகும் மகளிர் அணி செயலர் பொறுப்பை கனிமொழி கவனித்து வந்தார். பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன் திமுக மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழர்களின் வீடுகளை அகற்றுவதா?... கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ