ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுசி ஈமு கோழி நிறுவனம் பொது மக்களிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில் பாதிக்கப்பட்ட 96 பேர் புகார் அளித்து இருந்தனர். கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து 2 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவிக்கபட்டது.
கூடுதல் வட்டி தருவதாக மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
2012ஆம் ஆண்டு ஈரோட்டில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்ப்டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமி மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை கைது செய்தனர். சுசி ஈமு கோழி நிறுவனத்தில் பணிபுரிந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இன்று கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் (டேன்பிட்) இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
Read Also | பெண் போட்டியாளருடன் நேரம் செலவழிக்க Break கேட்கும் அமிதாப்பச்சன்
பொதுமக்களை ஏமாற்றிய குருவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 7 பேரை நீதிபதி விடுவித்தார்.
இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, குரு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இதற்கு முன்னதாக, சுசி ஈமு கோழி நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Also Read | ZEEL-Sony Merger: இணையும் இரு மீடியா ஜாம்பவான்கள், முக்கிய அம்சங்கள் இதோ
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR