Erode East Assembly Constituency Election: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகே எஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு
2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வென்றார். உடல்நலக் குறைவால் 2023 ஜனவரியில் அவர் காலமானார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி அந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால், திருமகன் தந்தையும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார். அவரும் உடல்நலக் குறைவால் கடந்த 14 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எப்பொழுது தேர்தல்?
இப்போது ஈரோடு கிழக்கு காலித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது பிப்ரவரியில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படும் என தகவல் பரவியுள்ளது. இந்த சூழலில் ஈரோட்டுக்கு இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றிய பேச்சுவார்த்தையும் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ்?
திமுக கூட்டணியை பொறுத்தவரையில் இதற்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கூட்டணி விதிப்படி இடைத்தேர்தல் என்றாலே ஏற்கனவே போட்டியிட்ட கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு தருவது வழக்கம். எனவே காங்கிரஸ் கட்சி மீண்டும் அந்த தொகுதியில் தாங்களே போட்டியிட வேண்டும் தங்கள் தரப்பில் வேறொரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியா?
அதே நேரத்தில் திமுக சார்பிலும் இரண்டு மூன்று பேர் திமுக தலைமையை அணுகி இருக்கிறார்கள். இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தலாம் நாங்கள் போட்டியில் ஆர்வமாக இருக்கிறோம் என்று சொல்லி தங்களுக்கு வேண்டப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் மூலமாக திமுக தலைமையை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் பெயர் பட்டியலில் உள்ளதாகத் தெரிகிறது.
இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக
அதிமுகவை பொறுத்தவரையிலே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எப்படி புறக்கணித்தார்களோ அதேபோல இந்தமுறையும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்காக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் இடைத்தேர்தல்கள் நியாயமாக நடக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்றும் அவர்கள் கடந்த முறை கூறியிருந்தார்கள். எனவே அந்த அடிப்படையிலேயே இந்த இடைத்தேர்தலையும் புறக்கணிக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி?
அதேபோல பாஜகவை பொறுத்தவரையிலே பாஜக நேரடியாக களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதே நேரத்தில் பாஜகவினுடைய கூட்டணியில் இருக்கக்கூடிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் யுவராஜா அவர் போட்டியிட ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சி போட்டி
எனவே இந்த கட்சிகள் மட்டுமல்லாமல் வழக்கம் போல நாம் தமிழர் கட்சி நிச்சயமாக இந்த தேர்தலில் வேட்பாளரை களம் இறங்குவார்கள். நாங்கள் தேர்தல் நடைபெறும்போது நிச்சயம் போட்டி போடுவோம் எங்களது வேட்பாளரை அறிவிப்போம் என்றும் சீமான் சொல்லியிருக்கிறார்.
இடைத்தேர்தலில் மும்முனை போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கக்கூடிய சூழ்நிலையிலே மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க - இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறதா? எடப்பாடி தரப்புக்கு சிக்கல்!
மேலும் படிக்க - ’எடப்பாடி பழனிசாமி ஒரு கோழைச்சாமி’ என அமைச்சர் கேஎன் நேரு கடும் தாக்கு
மேலும் படிக்க - யார் கட்சிக்கு வந்தாலும் போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி - புஸ்ஸி ஆனந்த்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ