பெண்கள் தற்கொலை முடிவுகளை தவிர்க்க புகார் அளிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி வாட்ஸ்அப் எண் வழங்கப்படும் என அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு மன ரீதியான, உடல் ரீதியான பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிப்பதற்காக 6374810811 என்ற தனி வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்து அதனை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போஸ்கோ (POCSO) சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் பெண்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அவர்கள் அது குறித்து புகார் அளிக்க 1098 என்ற எண் இருக்கிறது. அதில் புகார் அளித்தால் அவருடைய பெயர் பெற்றோர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.’ என கூறினார்.
ALSO READ:நள்ளிரவில் மதுவிருந்து, போதையில் அத்துமீறல்: ஆண் நண்பர்களை செருப்பால் அடித்த பெண்
‘மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிப்பதற்கு தனித்தனியாக வாட்ஸ்அப் எண் வழங்கப்படும். இந்த எண்ணில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏதாவது பாலியல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம். புகார்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.
பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளை ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம்’ என அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ALSO READ:உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் காதலி தர்ணா போராட்டம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR