AC Service Tips: தற்போது பலரது வீடுகளில் ஏசி முக்கியமான ஒரு சாதனமாக மாறி உள்ளது. மாறி வரும் கால சூழ்நிலையில் அதிக ஹீட் காரணமாக பலருக்கும் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. உங்கள் வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பு சில விஷயங்களில் கவனத்தை கொள்ள வேண்டும். இதில் அசால்டாக இருந்தால், உங்கள் ஏர் கண்டிஷனர் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன் நீங்கள் சில முக்கியமான விஷயங்களில் கவனத்தை கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏசியில் இருந்து அதிக கூலிங்கை பெற முடியும். ஏசி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | பசங்களுக்கு Maths வராதா... இந்த ஆப் மூலம் ஈஸியா தெரிஞ்சிக்கலாம் - இப்போவே பாருங்க!
குளிர்காலத்தில் நம்மில் பலரும் ஏசியை அதிகம் பயன்படுத்தி இருக்க மாட்டோம். தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், மீண்டும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், அதன் பேனல்களை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவற்றில் சிக்கியுள்ள அழுக்கு மற்றும் தூசி ஏர் கண்டிஷனருக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இதனால் நமக்கு உடல் நல பிரச்சனைகளும், ஏசியில் அதிக தூசி படிந்து போதிய கூலிங் வராமல் போகலாம். சாதாரண துணிகளை வைத்து சுத்தம் செய்வது போதுமானது என்றாலும், நல்ல கூலிங் பெற ஜெட் ஸ்ப்ரே பயன்படுத்துவது நல்லது. இதன் காரணமாக ஏர் கண்டிஷனர் நன்றாக கூலிங்கை தருகிறது.
ஒரு வேளை நீங்கள் சுத்தம் செய்ய ஜெட் ஸ்ப்ரேயை பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் ஏர் கண்டிஷனர் அதிக செலவு வைக்க வாய்ப்புள்ளது. கோடைகாலம் துவங்கும் முன்பு இதனை செய்து முடித்தால், உங்கள் ஏர் கண்டிஷனர் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்ல குளிர்ச்சியை அளிக்கும். மேலும், ஏசியில் உள்ள கேஸின் அளவை செக் செய்வது நல்லது. உங்கள் அறை நன்றாக குளிராக இருக்க இதனை சரிபார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். அது குறைந்தால், ஏசியில் இருந்து குளிரூட்டும் பிரச்சனை தொடங்கும். எனவே ஏசியின் கேஸ் அளவைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.
பொதுவாக, ஏர் கண்டிஷனரில் வாயு கசிவு ஏற்படுவதால் கூலிங் பாதிக்கப்படத் தொடங்குகிறது. நீங்கள் இந்த கசிவைச் சரிபார்க்கவில்லை என்றால், ஏர் கண்டிஷனர் சரியாக வேலை செய்யாது மற்றும் பல மணிநேரம் ஓடினாலும் உங்கள் வீட்டில் உள்ள அறையில் குளிர்ச்சி இருக்காது. இவை அணைத்தும் சிறிய பிரச்சனைகள் தான் என்றாலும், பின்னாலில் பெரிய செலவை வைக்க வாய்ப்புள்ளது. ஏர் கண்டிஷனரை ஆன் செய்யும் முன்பு, நீங்கள் அதை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இது பில்டரில் அழுக்கு சேர விடமால் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க | புகைப்படத்தில் இருந்து வீடியோ உருவாக்குகள்... இந்த AI கருவி உங்களுக்கு உதவும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ