2 நாள்களுக்கு GPay, PhonePe வேலை செய்யாது... இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்!

HDFC Bank: ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு தினங்களுக்கு GPay, PhonePe போன்ற UPI சேவைகள் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 3, 2024, 08:05 AM IST
  • பராமரிப்பு காரணங்களுக்காக UPI இயங்காது.
  • ஒரே நாளில் 2 மணிநேரம் UPI இயங்காது.
  • மற்றொரு நாளில் 3 மணிநேரம் UPI இயங்காது.
2 நாள்களுக்கு GPay, PhonePe வேலை செய்யாது... இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும்! title=

HDFC Bank UPI Downtime Alert: இந்த நவீன காலகட்டத்தில் யாருமே பெரிய தொகையை கையில் எடுத்துச் செல்வது கிடையாது. அனைத்து பரிவர்தனைகளும் வங்கி ஆப்களின் மூலமும், பரிவர்த்தனை ஆப்களின் மூலம் ஆன்லைனிலேயே செய்யப்படுகின்றன. பெரிய தொகை என்றில்லை, பலசரக்கு கடையில் பொருள்கள் வாங்குவது தொடங்கி, தெருவோரம் இருக்கும் பானிபூரி கடைகள் வரை அனைத்திலும் UPI மூலம் பணபரிமாற்றம் செய்யப்படுகிறது.

இது ஆரோக்கியமான மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் கையில் ரொக்கம் இன்றி வெளியே வருது சில நேரங்களில் பிரச்னையை ஏற்படுத்தலாம். நெட்வொர்க் பிரச்னை, மொபைலில் சார்ஜ் இல்லாமல் போவது என பல சந்தர்பங்களில் ரொக்கம் இல்லாதவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே கையில் எப்போதும் சில்லறை வைத்துக்கொள்வது நல்லது எனலாம். அதுமட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களை தவிர்த்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களின் சில பகுதிகளில் UPI பரிவர்த்தனை பயன்பாட்டுக்கும் வரவில்லை. அதுபோன்ற இடங்களுக்குச் செல்லும்போதும் கையில் பணம் வைத்திருப்பது நல்லது எனலாம்.

இந்த 2 நாள்களுக்கு UPI இயங்காது

இது ஒருபுறம் இருக்க, தற்போது இந்தியாவின் முன்னணி வங்கியான ஹெச்டிஎப்சியில் அதன் வாடிக்கையாளர்களுக்கு UPI சார்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது, இரண்டு நாள்களுக்கு அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு UPI சேவையை அவர்கள் பயன்படுத்த இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது. UPI சேவைகள் மட்டுமே வேலை செய்யாது, மற்றபடி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சேவைகள் இயங்கும் என ஹெச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹெச்டிஎப்சி வங்கி அதன் இணையதளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களே உஷார்!! நவம்பர் 30-க்குள் இதை செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

அதன்படி, வரும் நவ. 5 மற்றும் நவ. 23 ஆகிய இரண்டு தினங்கள் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக UPI சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவ. 5ஆம் தேதி அன்று 2 மணிநேரத்திற்கும், நவ.23ஆம் தேதி அன்று 3 மணிநேரத்திற்கும் தற்காலிகமாக UPI சேவைகள் இயங்காது என அறிவித்துள்ளது. சுமுகமாக பண பரிவர்த்தனை செய்ய இதுபோன்ற பராமரிப்பு பணிகள் முக்கியம் என வாடிக்கையாளர்களிடம் ஹெச்டிஎப்சி தெரிவித்திருக்கிறது. 

GPay, PhonePe இயங்காது

நவம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை என இரண்டு மணிநேரமும், நவம்பர் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை என மூன்று மணிநேரமும் பராமரிப்பு பணியின் காரணமாக UPI தற்காலிகமாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹெச்டிஎப்சி வங்கியின் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு, RuPay கிரெடிட் கார்டு போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் இயங்காது. HDFC MobileBanking செயலி, GPay, Paytm, Phonepe, Whatsapp Pay போன்ற எவ்வித செயலியிலும் UPI பரிவர்த்தனை மேற்கொள்ள இயலாது.  

இந்த நேரங்களில் நீங்கள் பெரியளவில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள மாட்டீர்கள் என்றாலும் இதனை அறிந்துவைத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை இந்த நாள்களில் எங்காவது வெளியே செல்லும்பட்சத்தில் கையில் ரொக்கம் இல்லாமல் போனால் சிக்கலுக்கு உள்ளாகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, இதனை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துவதும் அவசியமாகும். 

மேலும் படிக்க | ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News