செய்தி துறையை மாற்றியமைக்கப்போகும் AI - என்னவெல்லாம் செய்யும்?

செய்திதுறையில் தொகுப்பாளராக ஏஐ உருவெடுத்திருப்பதால், பல ஆயிரம் பேர் இப்போது வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா தொலைக்காட்சி கடந்த திங்கட்கிழமை ஏஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2023, 06:46 PM IST
  • செய்தி துறையில் ஏஐ செய்தி தொகுப்பாளர்
  • பல ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்
  • முழுமையாக மனித தொகுப்பாளர்களுக்கு மாற்றாக முடியாது
செய்தி துறையை மாற்றியமைக்கப்போகும் AI - என்னவெல்லாம் செய்யும்? title=

ஏஐ இப்போது உலகின் அனைத்து துறைகளிலும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இதன் வருகையால் பல ஆயிரம் பேரின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒடிசா டிவி திங்களன்று இந்தியாவின் முதல் பிராந்திய மொழி AI செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதேபோல், சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா மற்றும் குவைத் நியூஸ் ஆகியவை AI செய்தி அறிவிப்பாளர்களை கொண்டிருக்கின்றன. ஒடிசா டிவியை பொறுத்தவரை ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் ஏஐ செய்திகளைப் படிக்கும். இதற்கு லிசா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பிராந்திய AI தொகுப்பாளர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொகுப்பாளர் பொறுத்தவரை உலகில் உள்ள எல்லா மொழிகளையும் பேச முடியும். அதுவும் நொடியில் ஒரே நேரத்தில் எத்தனை விதமான மொழிகளிலும் செய்தி வாசிக்க ஏஐ-ஆல் முடியும். இது குறித்து ஒடிசா டிவி கூறியபோது, விரைவில் இன்னும் சில அப்டேட்டுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டே தொகுத்து வழங்கும் அளவிற்கு லிசாவை  பயிற்றுவிப்பதே அதன் குறிக்கோள் என்றும் சேனல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் லிசா இந்தியாவின் முதல் AI தொகுப்பாளர் அல்ல.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போனை இந்தியர்கள் எதற்கெல்லாம் அதிகம் பயன்படுத்திகிறார்கள் தெரியுமா?

மார்ச் மாதம், ஒரு ஹிந்தி செய்தி சேனல் ஒன்று இந்தியாவின் முதல் AI செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது. உலக அளவில் பார்க்கும்போது பிப்ரவரி 2018 ஏஐ செய்தி வாசிப்பு தொடங்கியது. சீன செய்தி நிறுவனமான Xinhua உலகின் முதல் AI அறிவிப்பாளரான Xin Xiaomeng-ஐ அறிமுகப்படுத்தியது. மார்ச் 2023-ல், சீன அரசு ஊடகமான பீப்பிள்ஸ் டெய்லி, ரென் சியாரோங் என்ற AI-ல் இயங்கும் ஹோஸ்டை வெளியிட்டது.

https://www.synthesia.io/ போன்ற இணையதளங்கள் ஏஐ தொகுப்பாளர் உள்ளிட்ட 120+ பல்வேறு அவதாரங்களைக் கொண்டிருக்கின்றன. அவர்கள் உங்கள் வீடியோக்களில் விவரிப்பவர்களாகவோ அல்லது வழங்குபவர்களாகவோ செயல்பட முடியும். AI அப்டேட்டின் அடுத்தபடியானது கத்ரீனா கைஃப், பராக் ஒபாமா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்லது உங்களுக்காக வேறு எந்த பிரபலங்களும் செய்திகளை வாசிப்பது போல் தோற்றமளிக்கும் போட்களை கொடுக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக AI தொடர்பான அப்டேட்களைப் பின்பற்றி வருபவர்களுக்கு, AI டெவலப்பர்களுக்கு இது ஏற்கனவே தெரியும். இது சாதாரண விஷயம் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
.
ஏஐ செய்தி தொகுப்பாளர்கள் பல மொழிகளிலும், நூற்றுக்கணக்கான பேச்சுவழக்குகளிலும் 24x7 செய்திகளைப் படிக்க முடியும். அவர்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு அவற்றைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருக்கவும் முடியும். தொழில்நுட்பத்தின் பார்வையில் இது மிகவும் நம்பிக்கைக்குரியதாகவும், மக்களின் வேலைக் கண்ணோட்டத்தில் ஆபத்தானதாகவும் தெரிகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செய்தி தொகுப்பாளர்களின் எண்ணிக்கை மனித செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களை இல்லாமல் செய்துவிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கணினி உள்கட்டமைப்பின் விரிவாக்கம் மக்களை வேலையில்லாமல் ஆக்கிவிடும் என்று 1990-களின் முற்பகுதியில் கூறும்போது அவநம்பிக்கையானதாகத் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, அன்றாட வாழ்க்கையில் கணிணி இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற சூழல் உருவாகிவிட்டது. அதுபோலவே AI பல மனித வேலைகளை எடுத்துக்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏஐ தொழில்நுட்பத்தின் அகண்ட பரப்பில் ஒரு சிறு பகுதிதான் செய்தித் துறை. மைக்ரோசாப்ட், ஐபிஎம் மற்றும் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் பல்வேறு பிரிவுகளில் AI-ன் அறிமுகம் காரணமாக மனித வேலைகளை குறைத்துக் கொண்டிருக்கின்றன. 

மே 2023-லிருந்து சுமார் 5 சதவீத பணிகளை அமெரிக்க நிறுவனங்களில் ஏஐ பார்க்க தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. உலகளவில் ஒப்பிடும்போது இந்த சதவீதம் 10 விழுக்காட்டை கடந்திருக்கும் என்றும் தொழிலுநுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், உடனடியாக வேலை போகும் என்ற அச்சம் தேவையில்லை. இதற்கு சில காலம் ஆகும். அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக வரும் நேரத்தில் மட்டுமே வேலை இழப்புகள் இருக்கும். அதுவும் சீரான கால இடைவெளியில் இந்த வேலை இழப்புகள் இருந்து கொண்டிருக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனித தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வழங்குநர்கள் முழுமையாக ஏஐ தொழில்நுட்பத்தால் மாற்ற முடியாது. 

மேலும் படிக்க | அதிரடி சலுகை! ரூ.20000க்குள் கிடைக்கும் சூப்பரான 5 ஸ்மார்ட்போன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News