Android New Feature: இனி உங்கள் முகபாவங்களைக் கொண்டு உங்கள் மொபைல் போனை இயக்கலாம்

புதிய ஆண்ட்ராய்டு 12 பீட்டா பல்வேறு முக பாவங்களை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான அம்சத்துடன் வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2021, 02:59 PM IST
Android New Feature: இனி உங்கள் முகபாவங்களைக் கொண்டு உங்கள் மொபைல் போனை இயக்கலாம்  title=

Android Feature: மாற்றுத்திறனாளிகள் தங்கள் சாதனங்களிலிருந்து அதிகப் பலனைப் பெற உதவும் சில பயனுள்ள அணுகல் கருவிகளை Android கொண்டுள்ளது. இருப்பினும், இந்த அணுகல் அம்சங்களில் சில அவற்றின் முதன்மை நோக்கத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து பயனர்களுக்கும் அனைத்து தொலைபேசிகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

புதிய ஆண்ட்ராய்டு 12 பீட்டா (Android 12 Beta) பல்வேறு முக பாவங்களை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான அம்சத்துடன் வருகிறது.

எக்ஸ்பிரஷன் கொடுத்து கேமராவை திறக்கலாம்

எக்ஸ்டிஏ டெவலப்பர்களில் எல்லோரும் பார்த்தபடி, ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 உடன் சேர்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு அணுகல் தொகுப்பின் பீட்டா பதிப்பு 12.0.0 புதிய "கேமரா ஸ்விட்ச்" அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில், முன் கேமராவைப் பயன்படுத்தி, கேமராவைத் தொடாமல் திறக்கலாம். இதற்கு நீங்கள் முகபாவனைகளை செய்ய வேண்டும்.

ALSO READ: Dangerous Apps: உங்க போனில் இந்த ‘9’ செயலிகளை உடனே நீக்கவும்

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் பல்வேறு அம்சங்களைக் காண உங்கள் முக அசைவுகளை எவ்வாறு பயன்படுத்துவது

வெவ்வேறு முகபாவங்கள் உங்கள் Android தொலைபேசியில் (Mobile Phone) செயல்களைத் தூண்டும். உதாரணமாக, நோட்டிபிகேஷன் பேனலுக்குச் செல்ல உங்கள் வாயைத் திறக்கலாம் அல்லது முகப்புத் திரைக்குத் திரும்ப உங்கள் புருவத்தை உயர்த்தலாம்.

எந்தவொரு செயல்பாட்டிற்கும் உங்கள் முக வெளிப்பாடுகளை நீங்கள் மேப் செய்யலாம். நோட்டிபிகேஷன்களை அணுகுதல், முன்னோக்கி/பின்னோக்கி ஸ்க்ரோல் செய்தல், டச் அண்ட் ஹோல்ட் செய்தல், முகப்புத் திரையில் பல்வேறு செயல்களை செய்தல், பல்வேறு அம்சங்களை செலக்ட் செய்தல் போன்ற பல பணிகளை உங்கள் முக பாவனைகளின் மூலம் செய்து முடிக்கலாம். முக சைகைகளின் மூலம் அளவு மற்றும் காலத்தையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

எப்படி பதிவிறக்கம் செய்வது

புதிய பேஷியல் ஜெஸ்சர் டூலை, ஆண்ட்ராய்டு 12 இல் பார்க்க்க முடிந்தது. இது இந்த தளத்திற்கு பிரத்யேகமானதாகத் தெரியவில்லை. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, ஆண்ட்ராய்டு 11 இயங்கும் தொலைபேசியில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு அக்செசிபிலிட்டி சூட்டின் ஏபிகேவை லோட் செய்வதில் XDA  வெற்றி பெற்றது. நீங்களும் இப்படி முயற்சி செய்ய விரும்பினால், இந்த வழியில் செய்து பார்க்கலாம். ஸ்டாண்டர்ட் ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருக்கலாம் அல்லது ஆண்ட்ராய்டு 12 பீட்டாவைப் பதிவிறக்கலாம்.

ALSO READ: Vivo Special Offer: உடைந்த டிஸ்பிளே இலவசமாக மாற்றப்படும், ரூ.1000 மதிப்பிலான நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News