இனி எப்பவும் ஜாலியா புல்லட் ஓட்டலாம் விலைக்கு வாங்காமலேயே!

Royal Enfield Rentals: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது பைக்குகளை இந்தியா முழுவதும் உள்ள 25 நகரங்களில் வாடகை சேவைக்கு விட திட்டமிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2023, 05:34 PM IST
  • தமிழ்நாட்டில் சென்னையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.
  • இதற்காக வாகனம் வாடகை அளிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.
  • வெவ்வேறு இடங்களில் வாடகை வேறுபடும்.
இனி எப்பவும் ஜாலியா புல்லட் ஓட்டலாம் விலைக்கு வாங்காமலேயே! title=

Royal Enfield Rentals: பொதுவாக நமது பேச்சுவழக்கில் புல்லட் என்றழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என்பது பெண், ஆண் என அனைத்து தரப்பினருக்கும் நிச்சயம் ஆசை இருக்கும். அதன் கம்பீரம், அதன் சத்தம் உள்ளிட்டவை மக்களை பெரிதாக ஈர்க்கக்கூடிய ஒன்றாக பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 

கடந்த சில ஆண்டுகளாக அதன் விற்பனையும் அதிகரித்திருக்கிறது என்பதை சொல்லியாக வேண்டும். வாகன கடன் நடைமுறை வந்ததன் அடிப்படையில் பலரும் வங்கியில் கடன், நிதி நிறுவனங்களில் தவணை முறையில் கடன் பெற்று ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்கி வருகின்றனர். இருப்பினும், ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் சில லட்ச ரூபாய்களை தாண்டுவதால் பலரும் அதில் பணம் செலவழிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

மக்களின் ஆர்வத்தை தூண்ட...

அந்த வகையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், அது தயாரிக்கும் பைக்குகளை நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு, மோட்டார் சைக்கிள் வாடகை ஆபரேட்டர்களுடன் கூட்டு சேர்ந்து 'ராயல் என்ஃபீல்டு ரெண்டல்ஸ்' (Royal Enfield Rentals) என்ற ஒரு தனித்துவமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தத் திட்டத்தின் மூலம், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, குறிப்பாக எங்கும் தொந்தரவு இல்லாத அணுகலை வழங்க உள்ளது. இதன் மூலம், ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மக்களிடையே தனது பைக்குகளை சவாரி செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | யூடியூப் அறிமுகப்படுத்தும் AI கருவிகள்! அனைவரும் படைப்பாளியாகலாம்

சுற்றுலா முதல் அனைத்திற்கும்...

ராயல் என்ஃபீல்டின் மோட்டார் சைக்கிள் சுற்றுச்சூழலில் ஆயிரக்கணக்கான சுயாதீன மெக்கானிக்ஸ், உஸ்தாட்ஸ், கஸ்டம்-பில்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாடகை ஆபரேட்டர்கள் இந்தியா முழுவதிலும் உள்ளடங்குகிறார்கள். நிறுவனம் பல்வேறு திட்டங்களில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. 

புதிய ராயல் என்ஃபீல்டு வாடகை முயற்சி இந்த அமைப்பை மேலும் விரிவுபடுத்துகிறது. ரைடர்கள் இப்போது இந்தியாவில் உள்ள 25 நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளை, நாற்பதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் வாடகை ஆபரேட்டர்களிடம் இருந்து வாடகைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

எளிமையான அணுகல்

இந்த புதிய முயற்சி குறித்து பேசிய ராயல் என்ஃபீல்டின் தலைமை பிராண்ட் அதிகாரி மோஹித் தர் ஜெயல், "எங்கள் மோட்டார் சைக்கிள் வாடகை மற்றும் டூர் ஆபரேட்டர்கள் மற்றும் மெக்கானிக்குகளின் குடும்பம் தூய்மையான மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் கலாச்சாரம் மற்றும் நோக்கத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் மக்கள் எங்கள் மோட்டார் சைக்கிள்களுக்கான பரந்த அணுகலையும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளனர். 

எங்கள் புதிய ராயல் என்ஃபீல்டு வாடகை முன்முயற்சியானது, இந்தியாவில் எங்கும் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுப்பதற்கான அணுகலைச் செயல்படுத்தும், மேலும் இது அனைத்து மோட்டார் சைக்கிள் வாடகைக்கும் நாங்கள் வழங்கும் ஆதரவின் அளவை மேம்படுத்தும்" என்றார். 

20+ நகரங்கள்

சென்னை, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், லே, மணாலி, தர்மசாலா, டேராடூன், டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், கோவா, மும்பை, சிம்லா, பிர் பில்லிங் மற்றும் பல நகரங்களில் ராயல் என்ஃபீல்டு வாடகைகள் செயல்படுகின்றன. வெவ்வேறு நகரங்கள் மற்றும் வெவ்வேறு ராயல் என்ஃபீல்டு மாடல்களில் வாடகை விலை மாறுபடும். குறிப்புக்கு, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை, புது டெல்லியில் ஒருநாள் முழுக்க (காலை 9:00 முதல் மாலை 7:00 மணி வரை) ரூ. 1,500 ஆக கொடுக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், அதே ராயல் எல்ஃபீல்ட் ஹிமாலயன் பைக், லேயில் ஒரு நாள் முழுவதும்  ரூ. 2,000க்கு வாடகைக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | Flipkart Big Billion Days Sale 2023: பிளிப்கார்ட் மெகா சேல் தொடங்கும் தேதி! மலைக்க வைக்கும் ஆஃபர்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News