Google Photos tips: புகைப்படங்கள், வீடியோக்களை எவ்வாறு backup செய்வது?

2021 ஜூன் முதல் தேதியில் இருந்து இலவச 15 ஜிபி சேமிப்பக அதிகபட்ச வரம்பை மீறியதும் கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 26, 2020, 05:32 PM IST
  • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்க பயன்படுத்த google photos சேவையை தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்த வேண்டுமா?
  • உங்கள் எல்லா தரவையும் காப்புப் பிரதி எடுத்து, காலி இடத்தை உருவாக்கலாம்
Google Photos tips: புகைப்படங்கள், வீடியோக்களை எவ்வாறு backup செய்வது?  title=

புதுடெல்லி: 2021 ஜூன் முதல் தேதியில் இருந்து இலவச 15 ஜிபி சேமிப்பக அதிகபட்ச வரம்பை மீறியதும் கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கடந்த வாரம் கூகுள் தனது சேமிப்புக் கொள்கையில் பெரிய மாற்றத்தை அறிவித்தது. தொழில்நுட்ப நிறுவனமான Google உலகளவில் பயனர்களுக்கான இலவச சேமிப்பை முடித்துவிட்டது. ஜூன் 1, 2021 முதல், இலவச 15 ஜிபி சேமிப்பகம் என்ற வரையறை முடிந்ததும் கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மாற்றத்துடன் சரிசெய்ய Google பயனர்களுக்கு சிறிது காலக்கெடுவையும் வழங்குகிறது.  

நமது பொக்கிஷமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்க பல ஆண்டுகளாக கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்துகிறோம். அந்த சேவையை தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்த விரும்பினால், இன்று உங்கள் எல்லா தரவையும் காப்புப் பிரதி எடுத்து, காலி இடத்தை உருவாக்கவும். இலவசமாக வழங்கப்ப்டும் 15 ஜிபி சேமிப்பிடம் (storage) பயன்படுத்தப்பட்ட பிறகு, கூகுள் 100 ஜிபி சேமிப்பகத்தை (storage) மாதம் 130 ரூபாய் அல்லது ஆண்டொன்றுக்கு 1,300 ரூபாய் கட்டணம் பெறும்.  

எனவே,  Google புகைப்படங்களில் சேமிக்கப்பட்ட உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி (backup) எடுக்கவும், சிறிது இடத்தை உருவாக்கவும் உதவிக்குறிப்புகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.  

உங்கள் புகைப்படத்தையும் வீடியோக்களையும் Google புகைப்படங்களிலிருந்து உங்கள் தனிப்பட்ட மடிக்கணினி, மொபைல் போன் அல்லது டேப்லெட்டில் காப்புப் பிரதி எடுக்க நீங்கள் Google Takeout ஐப் பயன்படுத்த வேண்டும். இந்த சேவையின் மூலம், பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கில் யூடியூப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட எல்லா தரவையும் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள் புகைப்படங்களிலிருந்து புகைப்படங்கள், வீடியோக்களை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது?

STEP 1: முதலில் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து, பின்னர் அதில் சேமிக்கப்பட்ட எல்லா தரவையும் பதிவிறக்கம் செய்ய அல்லது காப்புப் பிரதி (backup) எடுக்க takeout.google.com வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

STEP  2: வலைத்தளம் திறந்த பிறகு, “Deselect all” என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும்.   

STEP  3: அதில் Google புகைப்படங்கள் (Google Photos) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

STEP  4: மீண்டும் கீழே வந்து அடுத்த படிக்குச் செல்லவும்.  

STEP  5: frequency option-இல் இரண்டு தெரிவுகள் இருக்கும். export once மற்றும் export every two months for one year என்ற இரண்டில் உங்கள் தேவைக்கேற்ப தெரிவை தேர்வு செய்யவும்.

STEP  6: நீங்கள் .zip கோப்புகள் மற்றும் .tgz கோப்புகள் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 50 ஜிபி வரை கிடைக்கக்கூடிய கோப்பு அளவுகளைத் தேர்ந்தெடுக்க கூகுள் அனுமதிக்கிறது.

STEP  7: இந்தப் படி முடிந்தவுடன், Create export என்பதைக் கிளிக் செய்யவும்.

STEP  8: இப்போது, உங்கள் கணக்கைச் சரிபார்க்கக் கேட்கும் மின்னஞ்சல் (email) வரும்.   

STEP  9: காப்புப்பிரதி (backup) செயல்முறை தொடங்கியதும், இந்த பணி முடிவடைய சற்று நேரம் எடுக்கும். அது, உங்கள் தரவைப் பொறுத்தது. சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் எடுக்கும் என்பதால் உங்களுக்கு பொறுமை தேவை.

STEP  10: காப்புப் பிரதி (backup) முடிந்ததும், உங்கள் எல்லா தரவுகளும் பதிவிறக்கம் செய்யத் தயாராக இருக்கும் தகவலை கூகுள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம்  தெரிவிக்கும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News