ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்

ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Realme 6T GT இந்தியாவில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள், வேரியண்ட், விலை மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 22, 2024, 02:04 PM IST
  • Realme GT 6T அமேசான் தளத்திலும் வாங்கலாம்.
  • Realme GT 6T 2 நிறங்களில், 4 வேரியண்டில் வருகிறது.
  • Realme GT 6T 2 மீது பல்வேறு தள்ளுபடிகளும் உள்ளன.
ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம் title=

Realme GT 6T Price And Specifications: ரியல்மீ (Realme) நிறுவனத்தின் மொபைல்கள் சந்தையில் இளைஞர்களால் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக உள்ளது. அந்த வகையில், பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த Realme GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Realme நிறுவனத்தின் GT சீரிஸில் Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 2, Realme GT Neo 3, the Realme GT Neo 3T உள்ளிட்ட மாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றை தொடர்ந்து, தற்போது Realme GT 6T ஸ்மார்ட்போன் மீது எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. குறிப்பாக, இதில் இருக்கும் கேமரா சோனி LYT சென்சார் அமைப்புடன் வருவது இளைஞர்களை இன்னும் கவர்கிறது எனலாம். பேட்டரி மற்றும் பிராஸஸர் என இதன் சிறப்பம்சங்களையும், இதன் விலை விவரங்களையும் இதில் விரிவாக காணலாம்.

Realme GT 6T: டிஸ்ப்ளே

Realme GT 6T 2780 x 1264 பிக்சல்கள் ரெஸ்சோல்யூஷன் உடன் வருகிறது. இது 6.78-இன்ச் AMOLED முழு HD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதன் Refresh rate 120Hz, Touch Sampling rate 2500Hz ஆக உள்ளது. மேலும் டிஸ்ப்ளேவில் 6,000 nits-இன் உச்ச பிரகாசம் மற்றும் Dolby Vision டிஸ்ப்ளே பயன்பாடும் கிடைக்கும்.

Realme GT 6T: கேமிங்

இதில் கேமிங் செயல்திறனுக்காக ஒன்பது-அடுக்கு குளிரூட்டும் அமைப்பைக் கொண்ட ஐஸ்பெர்க் வேப்பர் கூலிங் அமைப்பு உள்ளது. இதனை கேமிங் செயல்பாடுகளை விரைவுப்படுத்தும், எவ்வித இடைஞ்சலும் கொடுக்காது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலானது. Realme UI 5.0 உள்ளது. மூன்று வருட OS அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதாக இந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

 

Realme GT 6T: கேமரா & பேட்டரி

இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் Sony Lytia 600 சென்சார் மூலம் செயல்படுகிறது. 50MP முதன்மை லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிளிசேஷன் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வருகிறது. மற்றொன்று 8MP வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகும். இது Sony IMX 355 சென்சார் மூலம் ஆதரிக்கப்படுகிறது. முன்பக்க செல்ஃபி கேமரா சோனி IMX615 சென்சார் மூலம் ஆதரிக்கப்படும். அதில் 32MP கேமரா உள்ளது. Realme GT 6T ஆனது 120W GaN சார்ஜருடன் வருகிறது. 5,500mAh பேட்டரி இதில் உள்ளது.

மேலும் படிக்க | அமேசான் - பிளிப்கார்டில் OnePlus 12R 5G போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம்...!

Realme GT 6T: விலை என்ன?

Realme GT 6T மொபைல் இந்தியாவில் இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. சில்வர் மற்றும் பச்சை நிறத்தில் வரும் இந்த மொபைல் நான்கு வேரியண்டில் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் 30 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் 32 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட் 35 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 12ஜிபி + 512 ஜிபி 39 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. 

Realme GT 6T: விற்பனை எப்போது?

Realme GT 6T மொபைல் வரும் மே 29ஆம் தேதி அன்று மதியம் 12 மணி முதல் விற்பனை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் அமேசான் தளத்திலும், realme.com தளத்திலும் வாங்கலாம். மேலும் Realme ஷோரூம்களிலும் இதனை நீங்கள் வாங்கலாம். இந்த மொபைலுக்கு Realme தற்போது பல்வேறு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக எக்ஸ்சேஞ்ச் ஆப்பரில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. 

Realme GT 6T: தள்ளுபடிகள்

அதுமட்டுமின்றி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்ஐபி வங்கி கார்டுகளின் மூலம் நீங்கள் இந்த மொபைலை வாங்கினால் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன்மூலம் நீங்கள், 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் 24 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் 26 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 12ஜிபி + 256ஜிபி வேரியண்டை 29 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 12ஜிபி + 512 ஜிபி 33 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் நீங்கள் வாங்கலாம். அதாவது, எக்ஸ்சேஞ்ச் + வங்கி கார்டுகளின் தள்ளுபடியை பயன்படுத்தி சுமார் 7 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியை நீங்கள் பெறலாம். 

மேலும் படிக்க | பழைய போனை விற்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள்! நஷ்டம் இனி உங்களுக்கு வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News