Samsung Galaxy S24 ஸ்மார்ட்போன் சீரிஸ் பிரீமியம் வகைகளில் அதிக எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று. Samsung Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra என மூன்று ஸ்மார்ட்போன்கள் இந்த சீரிஸில் அறிமுகமாக உள்ளது. வழக்கமாக சாம்சங் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும். தற்போது அதில் அலுமினியத்திற்கு பதிலாக ஒரு புதிய பொருளைக் கொண்டிருக்கும் என்று X தளத்தில் டெக் சார்ந்த ஒரு பதிவர் பதிவிட்டுள்ளார்.
அதாவது, ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது. அந்த சீரிஸில் ஐபோன் 15 Pro மற்றும் ஐபோன் 15 Pro Max உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அடக்கம். 2023ஆம் ஆண்டிற்கான அதன் முதன்மை ஸ்மார்ட்போன்கள், அவற்றின் முந்தைய மொபைல்களில் காணப்படும் துருப்பிடிக்காத எஃகு சட்டத்திற்கு பதிலாக டைட்டானியத்திற்கு மாற்றப்பட்டன.
இந்த டைட்டானியம் விளிம்புகள் அதிகம் பேசப்பட்டது. அந்த வகையில், Samsung Galaxy S24 சீரிஸை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் டைட்டானியம் சாம்சங்களில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி, டைட்டானியம் Samsung மொபைல்களில் வந்தால், அதன் விலை மற்ற மாடல்களை விட சற்று அதிகமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
X தளத்தில் டெக் சார்ந்த ஒரு பதிவர் அவரின் பதிவில்,"Samsung நிறுவனம் வியட்நாமில் உள்ள அதன் உள்நாட்டு உற்பத்தியில், அதன் Galaxy S24 மாடலுக்கான டைட்டானியம் பிரேம்களை தயாரிக்க உள்ளது. Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra மாடல்களுக்கு, தென் கொரிய தொழில்நுட்ப குழுமம் டைட்டானியம் பிரேம்களுக்கு பெயரிடப்படாத இரண்டு கூட்டாளர் நிறுவனங்களை நம்பியிருப்பதாக கூறப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
கசிந்த தகவல்கள்
இந்த ஸ்மார்ட்ஃபோன் விவரக்குறிப்புகள் கசிந்ததில் நல்ல சாதனையைப் பெற்றிருந்தாலும், Galaxy S24 Ultra மாடலில் மட்டுமே டைட்டனியம் இடம்பெற வாய்ப்புள்ளது என்றார். சமீபத்தில், ஒரு பதிவர் Galaxy S24 கணினி உதவி வடிவமைப்பு (CAD - Computer-aided Design) விவரங்கள் குறித்த தகவல்களை பதிவிட்டார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில், அந்த மொபைல் அதன் முந்தைய சீரிஸான Galaxy S23 Ultra மாடல் உடன் ஒத்ததாக இருக்கும் என்று கூறுகின்றன. இது குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் சாம்சங்கின் S பென்னுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samsung Galaxy S24 Ultra மாடலில் 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று தகவல் கூறப்படுகிறது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்பில் இந்த இந்த மொபைல் இயங்கும் என்றும் தகவல் கூறப்படுகிறது. அதே நேரத்தில் Galaxy S24 மற்றும் Galaxy S24+ ஆகியவை நிறுவனத்தின் Exynos 2400 SoC உடன் சில பகுதிகளில் அறிமுகமாகும்.
மேலும் படிக்க | இப்ப ஸ்மார்ட்வாட்ச் காஸ்ட்லி இல்ல... குறைந்த விலையில் தரமா வாங்கலாம் - பெஸ்ட் 4 இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ