புதுடெல்லி: Poco தனது புதிய ஸ்மார்ட்போன் F3 GT-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு கேமிங் சாதனமாகும். இந்த தொலைபேசியில் பல அருமையான அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள மிக முக்கியமான அம்சம் அதன் சார்ஜிங் வேகம் ஆகும்.
அதிக கேமிங்க் செயல்பாடுகள் காரணமாக தொலைபேசி வெப்பமடைவதைத் தடுப்பதற்காக, இதில் வேப்பர் சேம்பருடன் கிராஃபைட் மற்றும் கிராபீனும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொலைபேசியின் விலை மற்றும் அம்சங்கள் என அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை
இந்த தொலைபேசி மூன்று வகைகளில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ .26,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியை இரண்டு வண்ண விருப்பங்களில் பெற முடியும்.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டுடன் கூடிய போகோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போனின் விலை ரூ .26,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ .28,999 க்கு வாங்கலாம். தொலைபேசியின் சிறந்த மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகள் ரூ .30,999-க்கு கிடைக்கும்.
Poco F3 GT-யின் விவரக்குறிப்புகள்
Poco F3 GT ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இது (1,080x2,400) பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.
இந்த தொலைபேசியில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. போக்கோவின் இந்த தொலைபேசியில், மேட் பூச்சுக்கு மேல் ஏண்டி ஃபிங்கர் பிரிண்ட் கோட்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி பிரிடேட்டர் பிளாக் மற்றும் கன்மெட்டல் சில்வர் ஆகிய வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த தொலைபேசியில் டால்பி அட்மோஸின் ஆதரவுடன் இரட்டை ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும்
Poco F3 GT ஸ்மார்ட்போனில் (Smartphone) 5,065 எம்ஏஎச் வலுவான பேட்டரி உள்ளது. வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே இந்த தொலைபேசியை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இணைப்பு வசதிக்கு, இந்த தொலைபேசியில் வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Poco F3 GT-யின் கேமரா
புகைப்படம் எடுப்பதற்காக, இந்த தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 64 மெகாபிக்சல்கள் கொண்டது. 8 மெகாபிக்சல் கொண்ட செகண்டரி கேமரா அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் கொண்டது. மூன்றாவது கேமரா (Mobile Camera) 2 மெகாபிக்சல் கொண்டது. தொலைபேசியில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
ALSO READ: Poco M3 Pro 5G: அமர்க்களமாக அறிமுகம் ஆகவுள்ளது Poco-வின் புதிய 5G போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR