டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் இவர் தானா... யார் அந்த நோயல் டாடா...

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார்.  இந்நிலையில், ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவர் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்ததுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2024, 09:59 AM IST
  • ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவர் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்ததுள்ளது.
  • டாடா நிறுவனத்தின் அடுத்த தலைவர் என்று யூகிக்கப்படுபவர்களில் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவும் ஒருவர்.
  • நோயல் டாடா பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் இவர் தானா... யார் அந்த நோயல் டாடா... title=

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். இந்த வார தொடக்கத்தில் வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை இரவு,  ரத்தன் டாடா இறந்துவிட்டதாக டாடா நிறுவனம் அறிவித்தது. ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவர் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்ததுள்ளது. டாடா நிறுவனத்தின் அடுத்த தலைவர் என்று யூகிக்கப்படுபவர்களில் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவும் ஒருவர். நோயல் டாடா பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

நோயல் என். டாடா கடந்த 40 ஆண்டுகளாக டாடா நிறுவனத்துடன் இணைந்துள்ள பயணித்து வருகிறார். தற்போது அவர் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், வோல்டாஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் தலைவராக உள்ளார் மேலும் டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். 

நோயல் டாடா, ஆகஸ்ட் 2010 முதல் நவம்பர் 2021 வரை டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இது டாடா நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் விநியோக கிளையாகும். இந்த காலகட்டத்தில், அவர் நிறுவனத்தின் வருவாயை $500 மில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்த்தினார். இதற்கு முன் டிரெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1998ம் ஆண்டில் ஒரே ஒரு ஸ்டோர் என இருந்த நிலையில் இப்போது 700க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் உள்ளன.

மேலும் படிக்க |  விடைபெற்றார் ரத்தன் டாடா: வள்ளலாய் வாழ்ந்த வணிகர், தன்மையான தலைவர்

நவல் டாடாவின் மகன் தான் நோயல் டாடா. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா நிறுவனம் தனது ஐந்து தொண்டு நிறுவனங்களின் தலைவர்களாக நோயல் டாடாவின் மூன்று வாரிசுகளை நியமித்தது. லியா, மாயா மற்றும் நெவில் ஆகியோர் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய ஐந்து அறக்கட்டளைகளின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த அறக்கட்டளைகள் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானவை. அவர்களின் புதிய பதவிகளுக்கு இந்த ஆண்டு மே 6 அன்று ரத்தன் டாடா ஒப்புதல் அளித்தார். 

முன்பு இந்த அறக்கட்டளைகளின் தலைவர்கள் பெரும்பாலும் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் இதுவும் ஒரு பெரிய மாற்றமாக கருதப்பட்டது. லியா, மாயா மற்றும் நெவில் ஏற்கனவே பல டாடா நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் மற்றும் அறங்காவலர்களாக ஆன பிறகும் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது..

மேலும் படிக்க | ரத்தன் டாடா வாழ்க்கையை பற்றிய 15 முக்கிய தகவல்கள், எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News